தீபாவளி போட்டிக்குத் தயாராக விடுதலையாகிறாரா !!!! கைதி

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனராக கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி.

EC0cERZVUAEJHC7

இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி தெரியாமல் இருந்தது. இந்நிலையில் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் அதிகாரப்பூர்வ வெளியீட்டை படக்குழு சார்பாக நடிகர் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

WhatsApp-Image-2019-05-24-at-6.26.51-PM

இப்படத்தில் கதாநாயகிகள் யாரும் கார்த்திக் ஜோடியாக நடிக்கவில்லை எனவும் ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை திகிலாக இயக்குனர் கொடுத்திருக்கிறார் எனவும் தகவல் வந்துள்ளன.

மேலும் இப்படம் தீபாவளிக்கு பிகில் மற்றும் சங்கத்தமிழன் படங்களோடு இணைந்து கலக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: