இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ..வேதனை!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக தனுஷ் இணையும் படம் அசுரன். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார், தனுஷின் மகன்களாக கென் கருணாஸ் மற்றும் டிஜே ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், வெற்றிமாறன் அவர்கள் என்மீது அதிகம் வைத்திருக்கும் நம்பிக்கை தான் இந்த அசுரன்.

ஆனால் வடசென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன் அனால் கிடைக்காதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது எனப் பேசியுள்ளார்.

EDDPdfWUYAAacdm

மேலும் எனக்கும், வெற்றிமறான் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் அல்ல நாங்கள் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற நிலையில்  இப்படத்தின் கலை இயக்குனரான ஜாக்சன் அவர்களுக்கு கிடைக்காததே மிகுந்த வருத்தம் அளித்ததாகத் தெரிவித்தார்.

EDDln9PU8AISTbo

மேலும் ராட்சசன், பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை போன்ற சிறந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்காதது தான் இன்னும் அதிக வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: