ஏ.ஆ ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜயின் வெறித்தனம்…
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசைமயத்துள்ள இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானதும் அதிக வரவேற்பை பெற்றதோடு அதிகம் பகிரப்பட்டு பாராட்டவும் பட்டது.
நடிகர் விஜய் பல படங்களில் இதுவரை பாடல்களை பாடியுள்ளார். அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி மற்ற படங்களுக்கும் பாடியுள்ளார். ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இளையதளபதி பாடியது இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில் படத்தி விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இப்படத்தின் பாடல் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. இந்த பாடல் வெளியாகிய சில மணிநேரங்களுக்குள் அதிக அளவில் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகள் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .
சில வரிகள் விஜய் அரசியலுக்கு வருவதை முன்கூட்டியே அறிவிப்பது போல இருப்பதாக கருதுகின்றனர். இது விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்கியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.