யுவனும் அமீரும் வெளியிட்ட பொம்மி வீரனின் பர்ஸ்ட் லுக் , நன்றி தெரிவித்த சினேகன்
கவிஞர் ஸ்நேகனின் வரிகளில் பல ஹிட் பாடல்களை நாம் கேட்டிருந்தாலும் அவரை அந்தளவு யாருக்கும் தெரிவியவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகே அனைவரும் அறிந்தனர்.
அதற்கு பிறகு பிரபலமடைந்த சினேகனுக்கு மீண்டும் படவாய்ப்புகள் வரத்தொடங்கின. மேலும் சினேகன் இயக்குனராகவும் நடிகராகவும் களமிறங்கினார் . அதன்படி பனங்காட்டு நரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் படம் இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த கட்டத்திற்கு களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி நன்னாள் ஆனா இன்று ஸ்நேகனின் தயாரிப்பில் உருவாகவுள்ள பொம்மிவீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் அமீர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சினேகன். அக்கடிதத்தில் யுவன் மற்றும் அமீர் இருவரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கு மட்டுமின்றி நட்புக்கும் பலம் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு ஆதரவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் நடிப்பில் வெளிவரவுள்ள படத்திற்கும், தயாரிப்பில் உருவாகவுள்ள பொம்மிவீரனும் வெற்றி பெற வாழ்த்துகள் .