தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீர் நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாடு …

உலகின் நில பரப்பைவிட பறந்து விரிந்த கடல் பரப்பு அதிகமாக இருந்தாலும் நன்னீரின் அளவு மிகக்குறைவு. மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் நீர் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் பெய்யும் மழையின் அளவு தேவைக்கு அதிகமான அளவு நீரைக் கொடுக்கிறது.

ஆனால் அவற்றை பாதுகாத்து வைக்க வேண்டிய நாம் புதிய ஆறு, குளம், குட்டைகளை உருவாக்காவிட்டாலும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற அனைத்தையும் பாதுகாக்க மறந்துவிட்டோம். ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக மக்கள் இருந்து நீர்நிலைகளை காக்கும் பொறுப்பை செய்ய மறந்ததுதான் இன்றைய தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.

இந்நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பல நூறு தனித்தனி தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரே கூட்டமைப்பாக உருவாக்கி அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நம்மை சுற்றியுள்ள ஏறி, குளம், குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்களை தூர் வாரி மழைக் காலங்களில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டி மக்கள் ஒத்துழைப்போடு மாநாடு ஒன்றினை நடத்துகின்றனர்.

இம்மாநாடு திருச்சி மாவட்டம் உழவர் சந்தை வளாகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 7 ம் தேதி மதியம் 3 மணியளவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் மக்கள் நலவாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு Dr.C.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமை ஏற்கிறார்.

மேலும் மாநில செயலாளரும், கொங்கண் ரயில்வே இண்டிபெண்டன்ட் டைரக்டர் Dr. இரா.ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பீட்டர் வரவேற்புரை ஆற்றுகிறார்.

மேலும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மாநிலங்களின் பாஜக பிரமுகர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு செய்யவுள்ளனர். இந்த மாநாட்டில் பொதுமக்களாகிய நீங்களும் குடும்பத்தோடும், நண்பர்களோடும் உங்கள் உறவுகளோடும் கலந்து கொண்டு நீர் நிலைகளை பாதுகாக்க முன் வரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர்.A .ஜான்பீட்டர், திரைப்பட இயக்குனர் சண்முகர் உட்பட பல முக்கிய மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் விழா தொடர்பான உதவிகளுக்கு குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் .9486920697

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: