மீண்டும் தொடரும் ஆய்வு, துணை புரியும் ஆர்பிட்டர்!! பின்னடைவே தவிர தோல்வி அல்ல.. இஸ்ரோ அதிகாரியின் நம்பிக்கை

சந்திராயன் 1 ஐ அடுத்து நிலாவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலம் தான் சந்திராயன் 2. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ம் நாள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வி.எஸ்.எல்.வி III ராக்கெட் மூலமாக இந்திய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியால் அனுப்படட்டது.

bb6f00col3162423652_7147708_18072019_SSK_CMY

இந்த விண்கலத்தில் விண்சுற்றுகலன், தரையிறங்கி மற்றும் ஆய்வுக்கலன் ஆகிய அமைப்புகள் என அடுக்குகள் உருவாக்கப்பட்டு இருந்தன. ஏவுகலன் இலக்கை அடைந்ததும் விண்கலம் ஏவுகலனில் இருந்து பிரிக்க சமிக்கைகள் கொடுக்கப்பட்டது.

chandrayan2

இதனைத்தொடர்ந்து பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 8 ம் நாள் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மெதுவாக நிலவினை சுற்றி வந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து லேசர் ஆய்வுக்காக அனுப்பியது.

chandrayan-2-1

மேலும் நிலவில் நீர் மூலக்கூறுகள் குறித்தும், கனிம வளங்கள் குறித்த முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டி நிலவில் விண்கலம் தரையிறங்குவதற்கான சமிக்கைகள் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விண்கலத்தின் தரையிறங்கும் வேகம் குறைந்து கொண்டே வந்தது.

_108637371_0a8dee98-c3db-4429-b2dd-6a79dd5fdb31

ஆனால் வெற்றிகரமாக தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் விண்கலத்திற்கும் இஸ்ரோ விண்வெளி மையத்திற்கு இடையேயான சிக்னல் திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையி முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

47

இந்நிலையில் இஸ்ரோ மையத்தின் முக்கிய அதிகாரி கூறியதாவது. விண்கலத்தில் இருந்து தரைக்கலன் பிரிந்த பிறகு சந்திரனில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கருவியின் துணை கொண்டு 95 சதவிகித ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

2685111665-watch-video-chandrayaan-2-landing-in-moon.

மேலும் இந்த திட்டம் சிறு பின்னடைவை சந்தித்துள்ளதே தவிர தோல்வி அல்ல என்றும்  ஆர்பிட்டர் துணைகொண்டு ஆய்வுகள் தொடரும் என்றும், ஆர்பிட்டரிலும் நவீன புகைப்பட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் லேண்டர் கருவியின் சிக்னலை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளும் நடந்துகொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: