இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, பெங்களூரில் இருந்து நிலவை தொடர்புகொள்ள முயற்சி ….

சந்திராயன் 2 இந்தியா எதிர்பார்த்த வெற்றி , உலகையே திரும்பி பார்க்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தருணம். ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மெதுவாக நிலவில் தரையிறங்கி கொண்டிருந்தது.

chandrayaan-2_8e4a1de6-d0f3-11e9-a264-bc92e50e5c681567836910369

ஆர்பிட்டரில் இருந்து நிலவை நோக்கி தரையிறங்க சமிஞ்ஞைகள் பெற்றவுடன் லேண்டரின் வேகமும் குறைக்கபட்டது.  நிலவின் மண் தொட சிறுது தூரமே இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் திடீரென இஸ்ரோவுக்கும் விக்ரம் லேண்டர்க்கும் இடையேயான சிக்னல் துண்டிக்கபட்டது.

bbc1567945671502

இந்நிலையில் விக்ரம் லேண்டரைத் தொடர்புகொள்ள பல முயற்சிகள் மேற்கொண்டும் தொடர்புகொள்ள இயலாத நிலையில் நிலவில் இருந்து 100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் துணை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் விக்ரம் லேண்டர் குறித்து தகவல் பெறப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

29257775967f11533c03434710df56a4

அதன்படி இன்று விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ளது. மேலும் விக்ரம் லேண்டர் மெதுவாகவே தரையிறங்கி இருக்க வேண்டும். ஏனெனில் பாராசூட் உதவியோடு தரையிறங்கும் விக்ரம் லேண்டர் நிலவில் உள்ள ஈர்ப்பு விசையினாலும் மெதுவாக பலூன் கீழே விழுவது போலவே தரையிறங்க வாய்ப்புள்ளது.

chandrayaan-2211212-1567829495

மேலும் விக்ரம் லேண்டர் சரியாக நேராக தரையிறங்கி இருந்தால் மட்டுமே ஆய்வுகளைத் தொடர் முடியும் என்றும் தலைகீழாக விழுந்திருந்தால் சேதாரம் ஏற்பட்டு இருக்கும் அதனால் ஆய்வினைத் தொடர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

12chandrayaan21567945351013

விக்ரம் லேண்டருக்குள் பொருத்தப்பட்டுள்ள அவசர கால கருவிகளில் இருந்து சிக்னலைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

hqdefault (2)

பலவழிகளில் முயற்சி செய்தும் லேண்டரின் சிக்னலைப் பெற முடியாவிட்டால் ஆர்பிட்டர் மூலம் சிக்னல் அனுப்பி லேண்டரை தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதோடு விக்ரம் லேண்டருக்கு பெங்களூர் இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து சிக்னல் அனுப்பியும் தொடர்புகொள்ள முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

chandrayaan-2-3--1567835967

ஆனால் விடாமுயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும் என இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையும், இந்தியாவும் வெற்றியடைய வாழ்த்துகள்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: