நிஜமான கொலவெறி அசுரன் படத்துலதான்.. மரண வெய்ட்டிங்கா இருங்க தனுஷ் ரசிகர்களே!

வெற்றி மாறன் படம் என்றாலே எதிர்பார்ப்பு எகிரும் வேலையில் அந்த படத்தில் தனுஷ் நடிப்பு என்றால் சொல்லவே வேண்டாம். இருவர் கூட்டணியும் படத்திற்கு அசுர பலத்தைக் கொடுக்கும்.

இந்நிலையில் படத்தின் தலைப்பே அசுரன் என்ற முறையில் படத்தின் முன்னூட்டம் நேற்று வெளியானது.
முன்னோட்டம் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் அசுர மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்

முன்னோட்டத்தில் தனுஷ் கெட்டப் சாட்சாத் கிராமப்புற மனிதனாக இருக்கிறார். A கிளாஸ் ஆடியன்ஸ் முதல் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவரும் படமாக வரும் என்பதில் சந்தேகம் துளியுமில்லை.

தனுஷ் என்றாலே நடிப்பு என்ற சொல்லடையை மீண்டும் அசுரத்தனமாக நிரூபித்திருக்கிறார். கோலிவுட் தாண்டி பாலிவுட், டோலிவுட், மாலிவுட் வரை படத்தின் முன்னோட்டம் சென்று ஹிட் ஆகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: