நடிகர்களின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?!!… அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

திரையுலகில் இயக்குனரைவிட ஹீரோக்களே அதிகம் சம்பளம் பெறுகின்றனர். அவ்வகையில் தமிழ் நடிகர்களில் அதிக சம்பளம் பெறுவதில் முதல் இடம் பிடிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

download (8)

ரஜினிகாந்தின் வருமானம் மட்டும்  100கோடிக்கு அதிகமாம். ரஜினியை அடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் ஹீரோ விஜய் தானாம். ரஜினியை அடுத்து அதிகமாக ப்ரோமோசன்களுக்கு செலவு செய்யப்படுவது விஜய் படங்களுக்கு தான் என்கின்றனர்.

download (10)

இவ்வகையில் விஜயின் சம்பளம் மட்டும்  ஒரு படத்திற்கு 50 கோடி ரூபாய்.  விஜய்க்கு இணையான  சரியாக அவருடைய காலத்து ஹீரோவாக  மார்க்கெட்  இருப்பது தல அஜித் . விஜய்க்கு அடுத்து பட விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்வது இவருக்குத்தானாம்.

imageproxy

அஜித் ஒரு படத்திற்கு 45 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு படத்திற்கு சம்பளமாக 35 கோடி வாங்குறாராம்.

மேலும் தற்போது வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் 15 கோடியும், விஜய் சேதுபதி 11 கோடியும்,  தனுஷ்,கார்த்தி சிம்பு மூவரும் தலா  9 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

625.500.560.350.160.300.053.800.900.160.90

இவ்வாறு படத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் ஹீரோக்களின் சம்பளமே அதிகம் செலவிடப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அதிகமாக நடிக்கும் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே நான்கு கோடி சம்பளமா வாங்குறதா தகவலும் வந்துள்ளது.

201902121430026926_Nayanthara-Marriage-happens-only-After-completing-her-100_SECVPF.gif

இதனால் படத்திற்கான தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் முன்னணி ஹீரோக்களின் படங்களை அதிக விலைக்கே தியேட்டர் உரிமையாளர்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இதனால் டிக்கெட்டின் விலை அதிகமாகவே விற்க்கபடுகிறது என்பதால் விளம்பரம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்றுத் தெரிவித்திருந்தார்.

vikatan_2019-05_015ecdc8-0353-4326-955d-75e6ce0e1d3f_151419_thumb

ஆனால் இது அவர்களுடையோ ஏற்ற இறக்கங்களையும் மார்கெட்டையும் வைத்து தயாரிப்பாளர்கள் நிர்ணயிக்கும் சம்பளம். அதனை வரைமுறைப்படுத்துவது என்பது சாத்தியம் அற்ற செயல். மேலும் அதனை அரசு கேள்வி கேட்க முடியாது என்பது போன்ற பல விவாதங்கள் நடந்துவருகிறது.

மேலும் இது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் இதனை மறுத்தும் கண்டித்தும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: