எதிர்பார்ப்பில் ரசிகர்கள், அனுஷ்காவின் நிசப்தம் ….
பாகுபலி என்னும் பிரம்மாண்டப் படைப்பில் பிரம்மாண்ட நடிப்பை வெளிப்படுத்தியவர் அனுஷ்கா. ஹீரோக்கள் போல படங்களுக்காக கதாநாயகிகளும் கெட்டப் சேஞ்ச் செய்வது அரிது.
ஆனால் தன்னுடைய இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து நடித்தார் அனுஷ்கா. அதற்கு பிறகு அந்த எடையைக் குறைத்து மீண்டும் பழைய உடலை பெற அனுஷ்கா பெரும்பாடுபட்டார்.
அதன்பிறகு பாகுபலி படத்தில் பெரிய ஹிட் கிடைத்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அனுஷ்கா நடிக்கும் நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.