நாளைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!!… மெரீனா முதல் நம்ம வீட்டு பிள்ளை வரை!!…

சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றியவர்.

201903161532086317_Aishwarya-Rajesh-to-pair-with-Sivakarthikeyan-in-SK-16_SECVPF

இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் நாயகன் ஆனார்.  இதனைத்தொடர்ந்து படங்கள் வரிசையாக அமைந்தது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வெற்றியைக் கொடுத்தாலும் எதிர்நீச்சல் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு அடையாளத்தை கொடுத்தது. காமெடி கலந்த கமெர்சியல் ஹீரோ ஆனார் சிவா.

70908390

இப்படி தொடர்ந்து அமைந்த படங்கள் அனைத்துமே சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் அமைத்து கொடுத்தது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கவர்ச்சி சிவாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது.

ரெமோ படம் அவ்வை சண்முகிக்கு நிகரான ஒரு படைப்பாக சிவாவுக்கு அமைந்தது என்பதே உண்மை. தயாரிப்பாளராகவும் சிவா தனது பயணத்தை தொடங்கினார்.

vmpobnqh-jpg_710x400xt

மேலும்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் நாயகனாக அவருக்கு  வெற்றிவாகை சூட்டினாலும் அவரை ஒரு பாடகராகவும் அறிமுகப்படுத்தியது. இவ்வாறு குடும்ப பாங்கான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தார்.

கனா என்னும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து கனா நினைவாக உறுதுணையாய் இருந்தார். தற்போது தன்னை தமிழ்சினிமாவில் அடையாளம் காட்டிய இயக்குனர் பாண்டிராஜ் உடன் மூன்றாவது முறையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில்  இணைந்துள்ளார்.

24082019blobid1566628273041

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர், விளம்பரம் என அனைத்தும் பிரம்மாண்டமாகவும், எதிர்பார்ப்பை எகிரவைத்து கொண்டும் இருக்கிறது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அணு இமானுவேல் நடிக்கிறார். தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சூரி, இயக்குனர் பாரதிராஜா என பலர் நடித்துள்ளனர்.

banner-jpg_710x400xt.jpg

அண்ணன் தங்கை உறவுகளை வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும் சிவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாக இணைந்து கலக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை சிவாவின் ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

அண்ணனும் தங்கையும் வெற்றி வாகை சூட தி மூவீஸ் ஆப் இந்தியா தமிழின் வாழ்த்துகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: