நம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம், TheMoviesofIndia ரேட்டிங் 4.2/5. கண் கலங்கிய ரசிகர்கள்!!.. குடும்ப படம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கருப்புவெள்ளை காலம் முதல்  இன்று வரை பல பாசமலர்களின் கதைகளை பார்த்து கண்கலங்கி இருந்தாலும் அன்பை உணரவைத்து நம்மை உணர்ச்சிவசப்பட வைத்த சில படங்களின்  வரிசையில் நம்ம வீட்டு பிள்ளை படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.

EFZ94JyUwAE5reU

குடும்பத்தலைவனை இழந்த குடும்பம், கணவனை இழந்த மனைவி, தந்தையை இழந்த குழந்தைகள் கூடவே குடும்ப பகை உறவுகளுடனான பிரச்சனைகள் பாசப்போராட்டம் என அனைத்தும் கலந்த குடும்ப படம்  நம்ம வீட்டு பிள்ளை.

தந்தையை இழந்த சிவகார்த்திகேயன் தனது தாயையும், தனது தங்கையையும் அப்பா இல்லை என்ற குறையே தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். அண்ணன் மீதும் அம்மா மீதும், அம்மா பிள்ளைகள் மீதும், குறிப்பாக அண்ணன் தன் தங்கை மீதும் மாறி மாறி பாசம் வைத்து இருக்கிறார்கள்.

EFcsbu6UwAUaqG6

சிவகார்த்திகேயன் தனது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க நினைக்கிறார். ஆனால் திருமணம் தடைபட்டு நிற்க  தனது மாமாவுக்கு எதிராக தொழில் புரியும் சிவாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில்  நட்டி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.

ஊரில் ரவுடியாக திரியும் நட்டி பகை காரணமாக நடித்து ஐஸ்வர்யாவை கரம் பிடித்து கொடுமைப்படுத்துகிறார். வழக்கம் போல தங்கையை கொடுமை படுத்துவதை தடுக்கவும் முடியாமல் , கோவத்தை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கிறார் அண்ணன்  சிவா .

70908390

இந்நிலையில் கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறார் நட்டி. தங்கையின் கணவனை காப்பற்ற முயற்சிக்கும் பசப்போரட்டம் தான் மீதிக்கதை. சிவாவின் அப்பா யார் பழைய பிளாஸ்பேக் என்ன என்று சாட்டாக சொல்லி முடித்துவிடுகிறார் இயக்குனர்.

எங்க அண்ணன் என்ற ஒற்றை பாடலில் அண்ணன் தங்கையின் பாசத்தை காட்டிய இயக்குனர் படம் முழுவதும் அந்த உணர்ச்சியை குறைத்து விட்டார் என்பது கொஞ்சம் வருத்தம்.

EEafN5NU8AEcQL_

அடுத்து நாயகி அணு இமானுவேல் வழக்கம் போல கிராமத்து நாயகனை கிண்டல் செய்து சண்டையிட்டு காதலிக்கும் நாயகி அவ்வளவுதான். தாத்தா பாரதிராஜா  தரும் அட்வைஸ்களும் அப்பப்போ சொல்லும் குடும்பம் குறித்த பன்ச்களும் டக்கர்.

அண்ணன் சூரியக சிவாவுடன் இணைந்திருந்தாலும் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி எப்பவும் போல கலக்கல். இயக்குனர் பாண்டிராஜ் மகன் சூரிக்கு மகனாக நடித்துள்ளார். அப்பா சூரியுடன் மகன் அடிக்கும்நக்கலும் கிண்டலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

1c264509-8e5a-482c-ac15-1239155a1f67

பாண்டிராஜ் அவர்களின் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் எதவாது ஒரு வகையில் ஒரு சில இடத்தில் ஆவது முன்னிலைப்படுத்தி காட்டிவிடுவார். அப்படி இப்படத்தில் உள்ள உறவுகள் மைனா, ஆடுகளம் நரேன் , ரமா உட்பட பலருக்கும் அந்த அந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருத்தியிருக்கிறார்.

இமான் அவர்களின் இசையில் பாடல்கள் அருமைதான். ஆனால் எங்க அண்ணன், உன்கூடவே பொறக்கணும் பாடல்கள் அண்ணன் தங்கை பாசமழை பொழியும். அதேசமயம் டூயட் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேடகவைப்பது சந்தேகமே.

24082019blobid1566628273041

ஐஸ்வர்யா ராஜேஷ் கூடப் பொறந்த பொறப்பு அல்ல வளர்ப்பு தங்கை என்பது தெரிந்ததும் என்ன நடக்கிறது பாசபோரட்டம் வெற்றி பெற்றதா? தங்கையை மகிழ்ச்சியாக புகுந்த வீட்டில் வாழ வைத்தாரா என்பது தான் படத்தின் கதை.

என்னதான் கட்டியனைத்து பாராட்ட முடியாத பிள்ளை என்றாலும்  நம்ம வீட்டு பிள்ளை ரசிகர்களை கண் கலங்க வைத்த பாசமலர் பார்ட் 2 என்பதே உண்மை. நிச்சயம் குடும்பமாக பார்த்து மகிழ பர்ஸ்ட் கிளாஸ் குடும்பக்காவியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: