திருவங்காரனையை முதன்மை கிராமமாக முன்னெடுக்கும் முயற்சியில் Exnora நிர்மல் மற்றும் Exnora ஜானகிராமன்.

உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஐம்பூதங்களில் ஆக்சிஜன் என்னும் காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவற்றை நமக்கு கொடுத்து நம்மை வாழ வைக்கும் மண்ணின் மைந்தர்கள் மரங்கள்.

மரங்களின் அழிவுகள் நம் வரும் சந்ததியினரின் அழிவு என்பதை அறியாமல் அதற்கான ஆதாரங்களையே அழித்து வருகிறோம் என்பதை சமீப காலங்களில் தான் நாம் உணர்ந்து வருகிறோம்.

03819619-5feb-4a6e-9aa4-7da008ee90ce

அவ்வகையில் ஜானகிராமன் என்ற தனிமனிதர் தனது கிராமத்தின் நலன் கருதி முன்னெடுத்த முயற்சியில் பலரும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவங்காரனை என்னும் ஊரில் எக்ஸ்னோரா என்ற அமைப்புடன் இணைந்து 10000 பனைவிதைகள்  மற்றும் மரம் நடும் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

15a6a5fb-1de6-4516-8270-2518f4a441c3

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்னம் அருகிலுள்ள திருவங்காரனை என்னும் தனது பிறந்த ஊரான கிராமத்தை முதன்மை கிராமமாக முன்னெடுக்கும் விதமாக  எக்ஸ்னோரா.ஜானகிராமன் அவர்களின் மற்றுமொரு முயற்சியாக திருவங்காரனை ரெசிடென்ஸ் வெல்பேர் அசசோசியேசன் எக்ஸ்னோரா என்னும் அமைப்பை நிறுவியுள்ளார்.

41226142-87e7-403d-a038-bc53d34da66f

மேலும் அவருடைய ஆக்கத்தாலும் ஊக்கத்தாலும் அக்கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, கிராம முன்னேற்ற விழிப்புணர்வு விழா, பெயர்பலகை திறக்கும் விழா என்னும் முப்பெரும் விழாவாக வருகின்ற 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10    மணிமுதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.

6ee0b1c6-3b85-4ec5-9c97-04d744538d7c

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) திரு.சுந்தர் அவர்களும், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனர் திருமிகு.சேக்கிழார் .டாக்டர்.எம்.பி.நிர்மல் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

8c75376e-a1d4-49d1-aef0-2cc69a572d16

மேலும் இவ்விழாவில் தலைவர் ஜி.நேரு அவர்கள் தலைமையிலும் பொதுச்செயலாளர் திரு.மோகன் கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும்  பொருளாளர் வி.அரவிந்த்சாமி அவர்கள் முன்னுரை வாசிக்க, எம்.விஜயமோகன் மற்றும் கே.மணிகண்டன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதே நடைபெறவுள்ளது.

மேலும் எக்ஸ்னோரா.திரு.ஜானகிராமன் அவர்களுக்கு உறுதுணையாக உறுப்பினர்கள், கிராமமக்கள், இளைஞர் அமைப்புகள், மகளிர் குழுவினர் என பலரும் உடனிருந்து சிறப்பு செய்யவுள்ளனர்.

d4724a09-3730-4278-9d8f-bd18ddc0fa7d

இவ்விழாவில் தாங்கள் அனைவரும் தங்கள் உறவும் நட்பும் சேர்ந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழாக்குழுவினர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளனர்.

திரு.ஜானகிராமன் அவர்களுக்கும், இம்முயற்சியில் இணைந்துள்ள மற்றும் பலருக்கும் வாழ்த்துக்கள்…முயற்சிகள் தொடரட்டும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: