நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே மேடையில் இளையராஜாவும், வைரமுத்துவும் பேச்சு !!..

பழம்பெரும் பின்னணி பாடகியான  சுசிலா அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

p-susheela

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பாடகி சுசிலா அவர்களின் பெருமைகளை பேசினர். அவ்விழாவில் இளையாராஜா அவர்களும், வைரமுத்து அவர்களும் கலந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் இளையாராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும் நீண்ட நாட்களாக மனக்கசப்பு இருந்து வந்தது. இதனால் இதுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. மேலும் எந்த விழாக்களிலும் இருவரும் இணைந்து கலந்து கொண்டதும் இல்லை.

இருவரையும் ஒரே விழாவில் காண்பது என்பது அரிதானது. மேலும் பல பெரிய இயக்குனர்கள முயற்சித்தும் இருவரும் இணைந்து பணியாற்றும் தருணம் வாய்க்கவேயில்லை.

64663

இந்நிலையில் சுசிலா அவர்களின் பிறந்தநாள் விழாவில் இசையமைப்பாளர் மற்றும் இளையாராஜா அவர்கள் இருவரும் கலந்துகொண்டதோடு விழா மேடையில் சுசிலா அவர்களின் பெருமை குறித்தும் பேசினர்.

47413

இளையராஜா அவர்கள் பேசுகையில், மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்னும் அருமையான பாடல் சுசிலா அம்மா அவர்களின் குரல்களில் அழகாக அமைந்தது குறித்து பேசினார்.

அப்போது இந்த பாடல் இக்கால இளைஞர்கள் அனைவருக்கும் அப்படியே பொருந்தும் எனவும் இந்த வரிகள் கண்ணதாசன் அவர்களுடையது. பாடலின் இசையை கொடுத்ததும் பாடல் வரிகளைக் கொடுக்க யாரும் இல்லை இவ்வுலகில்.

indiatv94f011_vairamuthu1

ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இருக்கும் மேலும் அந்த பாடல்கள்  புகழ் பெற்றது சுசிலா அம்மா அவர்களின் குரல்களினால் எனக் கூறினார்.

இதனையடுத்து கவிஞர் வைரமுத்து பேசுகையில் “கண்ணனுக்கு மையழகு” என்னும் பாடல் சுசிலா அம்மா அவர்கள் பாடியதால் தான் சரித்திரத்தில் இடம் பிடித்தது என்றுக் கூறினார்.

14-1436841968-ms-viswanathan3-600

மேலும் இந்த பாடல் ரஜினியின் மனிதன் படத்திற்காக எழுதப்பட்டது. பலர் இந்த பாடலுக்காக ஆர்மோனியப் பெட்டிகளில் கைவைத்தும் உயிர்பெறாத நிலையில் எம்.எஸ்.வி.அவர்களின் கைகளால் மட்டுமே உயிர்பெற்றது.

உலகத்தில் சிறந்த கவிஞன் கண்ணதாசன் என்பதில் எங்களுக்கு எந்த ஐய்யமுமில்லை. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உலகின் மிகச்சிறந்த இசையைமைப்பாளர் என்ற கருத்திலும் வேறுபாடில்லை.

download (24)

அவர்கள் மொழி மட்டும் வாழ்வோடு கொடுத்த பாடல்கள் சுசிலா அவர்களின் குரலால் தான் தமிழகத்தில் பெயர்பெற்றது எனக்கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: