வீடு வாங்கி கொடுத்து விளக்கும் ஏற்றி வைத்த ரஜினி!.. மகிழ்ச்சி தெரிவித்த இயக்குனர்.

சூப்பர் ஸ்டார் என்னும் இடத்தை எப்படி அடைந்தேன் என்பதை ரஜினிகாந்த் அவர்களே சொல்ல பலமுறை கேட்டதுண்டு. உழைப்பும், முயற்சியும் தாண்டி அவர் மேல் நம்பிக்கை வைத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் பெருமையாய் கூறுவார்.

supesrtar-tkhqDfbbbfgdi

அப்படி அரசியல் வருகை குறித்து உறுதியளித்து விழா மேடையில் பேசிய ரஜினி, தேவர் பிலிம்ஸில் கதை துறையில் பணியாற்றிவந்தவர் கலைஞானம். அவரைத் தனியாக படம் செய் நான் தயாரிக்க பணம் தருகிறேன்  எனச் சொன்ன தேவர், பைரவி படத்திற்கு ஜெயஷங்கரை ஹீரோவாக போட்டு என்னை (ரஜினி) வில்லனாகப் போட்டு எடுக்க சொல்லி அறிவுறுத்த அதனை மறுத்து ரஜினி தான் நாயகனாக சரியாக இருப்பார் என உறுதியாக சொன்னதால் தேவர் தயாரிக்க பணம் தர மறுத்துவிட்டார்.

ஆனால் பல முயற்சிகளுக்கு பிறகு கலைஞானம் அவர்கள் படம் எடுக்க பணம் புரட்டி என்னை (ரஜினி) அணுகினார். அப்போது சிறு படங்களில் ஐந்து முதல் பத்தாயிரம் வரை மட்டுமே சம்பளம் வாங்கி தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த என்னை ஹீரோவாக நடிக்க கேட்டார்.

Rajinikanth new house

அதற்கு நானோ(ரஜினி),  இதெல்லாம் சரியாக வராது நான் வில்லனாகவே நடிக்கிறேன் எனக் கூறினேன் ஆனால் நீங்கதான் ஹீரோ நாளை வருகிறேன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் எனக்கூறி சென்றார்,

ஆனால் நானோ இது சரியாக வராது நாளை வந்தால் அதிகம் சம்பளம் கேட்டால் வேண்டாம் என சொல்லிவிடுவார் என்று முடிவெடுத்து மறுநாள் வந்த கலைஞானம் அவரிடம் 50,000 சம்பளமாக கேட்டேன்.

உடனே, 30,000 இந்தா அட்வான்ஸ், ஸ்ரீப்பிரியா உனக்கு நாயகி, சில நேரங்களில் சில மனிதர்கள் ஸ்ரீகாந்த் வில்லன் என்று கூறியவுடன் ஆட்டுக்கார அலமேலு புகழ் நாயகி எனக்கு நாயகியாக, ஸ்ரீகாந்த் அவர்கள் வில்லனா என ஆச்சரியபட்டு போனேன்.

rajnikanth-kalaigna-tiqkOuefabeda

ஆனால் படம் வெளியான பிறகு என்னை எங்கு பார்த்தாலும் எப்படி இருக்கேனு மட்டும் கடந்து விடுவார். அதன் பிறகு என்னை படம் செய்ய சொல்லிக்கூட கேட்டதில்லை. நான் நல்லா இருக்கணும்னு நினைச்சதோட இந்த உயரம் அடைந்ததுக்கு அவருதான் முக்கிய காரணம்னு பெருமையா சொன்னார்.

இதனையடுத்து கலைஞானம் அவர்களை பாராட்டி பாரதிராஜா கலை இலக்கிய பண்பாட்டு அமைப்பு சார்பாக பாராட்டு விழா கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது.

அவ்விழாவில் நடிகர் சிவக்குமார் அவர்கள் பேசும்போது கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறார் எனக் கூறினார். இதனையடுத்து அவருக்கு தமிழக அரசு சார்பாக வீடு வாங்கித்தரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராசு கூறினார்.

download (37)

இந்நிலையில் அங்கு பேசிய ரஜினி அவர்கள் நல்லா இருக்கேனு சொல்லுவார். சிரிச்சா முகத்தோடு வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பார்த்த நான் நல்லபடியா இருக்கறதா நினைச்சுட்டேன். அப்படித்தானே தோணும்னு .

ஆனா நான் அவருக்கு மீண்டும் படம் செய்து கொடுத்து இருக்கணும். அவருக்கு வீடு கொடுக்கும் உரிமையை நானே எடுத்துக் கொள்வேன் அரசுக்கு தர மாட்டேன் எனக் கூறி படபிடிப்புக்கு செல்லும் முன் வீடு வாங்க தேவையான பணத்தை காசோலையாக அலுவலகத்தில் கொடுத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து தர்பார் பிடிபுக்கு சென்றுள்ளார் ரஜினி. மேலும் வீடு வாங்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய ரஜினி மறுநாளே அதற்கான காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

72782

தற்போது கலைஞானம் அவர்களுக்கு சென்னை விருகம்பபாக்கத்தில் அமுதி பிளாட்ஷில் வீடு மூன்று படுக்கறை கொண்ட வீடு வாங்கியுள்ளனர். அவ்வீட்டிற்கு வந்த ரஜினி அவர்கள் கலைஞானம் அவர்களுக்கு பாபா அவர்களின் புகைபடத்தை வழங்கினார்.

மேலும் விளக்கேற்றி வைத்து மகிழ்ச்சி தெரிவித்தார் ரஜினி. இந்நிலையில் வீட்டிற்கு வருகை தந்த ரஜினி அவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்று பால் ஸ்வீட் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கலைஞானம் குடும்பத்தார் தெரிவித்தனர்.

இந்த செயல் குறித்து கலைஞானம் அவர்களிடம் கேட்டபோது, ரஜினி வீடு வாங்கிகொடுத்து விளக்கும் ஏற்றி வைத்தார் என்று மிகுந்த ஆனந்தத்தோடு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். Rajini_kalai_650

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: