சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!..

நடிகர் சூர்யா இயக்குனர் கே.வி ஆனந்த் கூட்டணியில் உருவாகி வெளியான படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார். மேலும் ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறப்பான படம் என்ற விமர்சனத்தை பெற்றது என்பதும் உண்மை.

இதனையடுத்து சூர்யா சூரரை போற்றும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை அடுத்து சூர்யாவின் தம்பி  கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன.

ஆனால் தற்போது சிறுத்தை சிவா ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால் தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை இயக்குனர் ஹரி அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

201804052103224099_Suriya-Again-joins-with-Hari_SECVPF

ஆனால் சூர்யா ரசிகர்களோ சிங்கம் படத்தின் நான்காம் பாகமாக இருக்குமோ என கலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது கதையும், கதைகளமும் வேறு என்று தகவல்களும் வந்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: