பிகில் சிறப்புப் பார்வை : பிகில் படத்தின் அதிகாலை நாலு மணி காட்சிக்கு போட்றா வெடிய. தளபதி ரசிகர்கள் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு ஒரு பிகில் பார்சல்.

பிகில் படத்திற்கான அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். பிகில் படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லையென்ற செய்தி வந்ததிலிருந்து கவலை தோய்ந்த முகத்தோடு இருந்த தளபதி ரசிகர்கள் இந்த செய்தி அறிந்து இணைய பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

நிஜமாகவே இந்த தீபாவளி பிகில் தீபாவளி தான். இதோ பிகில் பட்டாசுகள் வெடிக்க தயார்.

பிகில் சத்தம் தமிழகம் தாண்டி உலகெங்கும் கேட்கட்டும் தளபதி ரசிகர்களே. ஆப்பி பிகில் தீபாவளி.

தளபதி ரசிகர்களின் இத்தனை கொண்டாட்டத்திற்கும் காரணம் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள்தான். மிகப்பெரிய பட்ஜெட் படமான பிகிலை மரண மாஸிற்கு தேவையான அனைத்து வேலைகளுக்கும் ஒரு Creattive Producer ஆக  மிக கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

காரணம் ஒரு சாதாரண தயாரிப்பாளராக இல்லாமல் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தின் இசை வெளியீடு படத்தின் டிரைலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற அனைத்தையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அவர்களிடம் கொண்டு சேர்த்தது தான்.


 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கபாலி படத்திற்கு கலைப்புலி தாணு அவர்கள் எப்படி ஹிமாலய விளம்பரத்தை கொடுத்தாரோ அதைப்போலவே தளபதியின் பிகில் படத்திற்கு ஹிமாலய விளம்பரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி.


இளவயதில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளராக பொறுப்பேற்று அதை சிறப்பாக செய்து முடித்த அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ஒரு சிங்கப்பெண் என்றால் அது மிகையல்ல.


பிகில் படத்திற்காக உழைத்த தயாரிப்பாளர், இயக்குனர் இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தி மூவிஸ் ஆப் இந்தியா இணையதளம் வாழ்த்துகிறது.

அதிகாலை நாலு மணி காட்சிக்கு போட்றா வெடிய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: