சிறப்பு காட்சிக்கு நோஓஒ!!!!…பிகில் திகில் எதுவா இருந்தாலும் சட்டம் ஒண்ணுதான்!!… அமைச்சர் சொன்ன பதில்

பண்டிகை கொண்டாட்டங்களில் சினிமாவும்  ஒரு அங்கமாகி போனது. வருகின்ற தீபாவளிக்கு வெளியாகவுள்ள படங்களும் அதிகம் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில் நடிகர் விஜய்-இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

27082019blobid1566920269573 (1).jpg

இப்படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியாகவுள்ளது. மேலும் மாநகரம் என்னும் அறிமுக படத்தில் விமர்சன ரீதியாக வெற்றி இயக்குனராக கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாகவுள்ள படம் கைதி.

இந்நிலையில் மற்ற படங்களும் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் போடப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் திரையரங்குகள் சிறப்பு காட்சிகளின் போது கலை கட்டும். ஆனால் சிறப்பு காட்சிகள் ரத்து என அரசு அறிவித்துவிட்ட நிலையில் அது ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு நடைபெற்று கொண்டுத்தான் இருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கபடுகின்றனர். இதனால் தான் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிகில் திகில் எந்த படமாக இருந்தாலும் சட்டம் பொதுவானது தான் என்று அதிரடியாக செய்தியாளர்களுக்கு பத்தி அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: