சத்தம் கொஞ்சம் குறைவுதான்!!.. மீண்டும் அமையுமா அட்லி – விஜய் கூட்டணி !..

அக்டோபர் 25ம் தேதி தான் எங்களுக்கு தீபாவளி என காத்திருந்த ரசிகர்களுக்கு பிகில் வெறும் பிஜிலி வெடியாய் போயிருச்சு போல.

அட்லி-விஜய் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் பிகில். தெறி, மெர்சல் என்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, விஜய்க்கு மீண்டும் அதனையும் மீறிய வெற்றியைக் கொடுக்க தவறிவிட்டார்.

images (25)

இதுவரை அட்லி இயக்கிய படங்கள் சுட்ட கதைகள் என்று பேசப்பட்டு வரும் நிலையில் பிகில் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்குமுன் எடுக்கப்பட்ட மற்ற ஸ்போர்ட்ஸ் படங்களைப் போலவே உள்ளது.

இருவேறு திசைகளில் பயணிக்கும் அப்பா விஜயும், மகன் விஜயும். ஊருக்காக ரவுடியான அப்பா. கால்பந்து விளையாட்டு மட்டுமே தனது உலகம் என வாழும் மகன் விஜய்.

download (46)

ஆனால் அப்பாவை தனது கண்முன் கொன்றதும் மகன் கத்தியை கையில் எடுத்து ரவுடியாக மாறுகிறார். அப்பாவை கொன்றவர்களை அங்கேயே கொலைசெய்து ஊருக்காக ரவுடியாகிறார்.

பிறகு ரவுடி பெண்கள் கால்பந்து அணியின் கோச் ஆகிறார். அவர்களை விளையாடி ஜெயிக்க வைக்கிறார். வழக்கம் போல எல்லா படங்களிலும் வரும் அதே உணர்ச்சி மிகுந்த வசனங்கள். ஆனால் பழகிப்போன காட்சிகள் போலவே நம் கண்முன் நிற்கின்றன.

download (47)

மாஸ் ஹீரோ விஜய்க்கு அதிக மாஸ் இல்லாமல் போனது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் இல்லை அதிக வருத்தத்தையே கொடுத்து இருக்கிறது. மெர்சல், தெறி படங்களில் இருந்தது அப்படியே மாறுபட்டு இருக்கும் விஜய்யை ரசிகர்கள் அதிகம் விரும்பவில்லை என்பதே உண்மை.

கனா, கென்னடி கிளப் போன்ற சமீப கால படங்களின் தழுவல்கள் அப்பட்டமாக தெரிகிறது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையைக் கொடுத்துள்ளது. அத்தனை எதிர்பார்ப்புகளோடு, ஆரவரத்தொடும் சரவெடியாய் வருவான்  என காத்திருந்த ரசிகர்ளுக்கு பிகில் பிஜிலி வெடிதான்.இதனால் அட்லி – விஜய் கூட்டணி மீண்டும் தொடர் வாய்ப்பு இல்லை என்பது போலவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: