அதிரடி காட்டும் அமலா பால் – அதோ அந்த பறவை போல

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது அதோ அந்த பறவை போல. சண்டைக்காட்சிகளில் அமலாபால் அதிரடியாக நடித்துள்ளார். இதற்காக கிராவ் மகா என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொண்டுள்ளார்.

ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உடன் மோதும் சண்டைக்காட்சி பேசப்படும். சிறுவன் பிரவீன் சிறப்பாக நடித்துள்ளார். தனியாளாக அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடுகிறார் அமலாபால். யாருடைய உதவியும் இல்லாமல் அந்த காட்டில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

பெண்கள் பாதுகாப்பு பலவீனமாக உள்ள இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக அமைந்துள்ளது. அருண் எழுதிய கதையை கே ஆர் வினோத் இயக்கியுள்ளார்.

தயாரிப்பு ஜோன்ஸ். அமலாபால் கதாநாயகியாக நடித்து சென்சார் யு சர்டிபிகேட் கொடுத்தது திரையுலகினரை திகைக்க வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: