ராஜாவுக்கு செக் – ஒருவாரத்தில் ரசிகர்கள் திரை விமர்சனம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். இயக்கம் சாய் ராஜ்குமார். ஒளிப்பதிவு எம்எஸ் பிரபு. இசை அறிமுக இசையமைப்பாளர் வினோத். குடியரசு தின கொண்டாட்டமாக வெளிவந்துள்ள படம்” ராஜாவுக்கு செக்”.

சேரன்,  ஸ்ருஷ்டி  டாங்கே நடித்துள்ளனர். சேரன் போலீஸ் அதிகாரி வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தை நினைவு கூறும் வகையில் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒரு வீட்டிற்குள்ளேயே முக்கால்வாசி படம் நடந்தாலும் எம்எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு நம்மை கட்டிப் போடுகிறது.

சேரனின் மகள் அவளது காதலனா லேயே  கடத்தப்படுகிறார். சேரன் மகளை மீட்கும் போராட்டமே” ராஜாவுக்கு செக்”. இயக்குனர் சாய் ராஜ்குமாரின் முதல் படம்” மலை”. இரண்டாவது படமான” ராஜாவுக்கு செக்” மீண்டும் அவருக்கு வாசலை திறந்து விட்டிருக்கிறது.

சேரனின் மனைவியாக சிருஷ்டி டாங்கே தன் பங்கை சிறப்பாக தந்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பும் பாராட்டும் விதமாகவே இருக்கிறது. அவரின் அழகான நடிப்பு படத்திற்கும் அழகு. பின்னணி இசை அருமை. த்ரில்லர் படமாக வெளிவந்துள்ள” ராஜாவுக்கு செக்” ரசிகர்களுக்கு கிக்.

படம் வெளிவந்து ஒருவாரம் ஆகின்ற நிலையில் படம் பார்த்த அனைத்து ரசிகர்களுமே படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையே கொடுத்துள்ளனர். சேரனின் நடிப்பு வழக்கம் போலவே இயல்பாகவும் தந்தைக்குரிய உணர்வுகளை கொஞ்சம் கூட பிசகாமல் கொடுத்திருப்பது படத்திற்கு பெரும்பலம்.

நாடக காதல் அரங்கேறி சமுதாயத்தை சீரழித்து வருகின்ற இன்றைய காலகட்டங்களில் “ராஜாவிற்கு செக்” மிகவும் அவசியமானது. தந்தை மகள் பாசப் போராட்டம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும்.

எல்லாக் காலங்களிலும் சேரனின் நடிப்பிற்கு மக்கள் ஆதரவு உண்டு. காரணம் சேரன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் எப்பொழுதும் சாமானியன் முதல் சாதித்த மனிதர்கள் வரை எளிதில் சென்றடையும் வகையிலான கதைக்களம்.

தமிழ் ரசிகர்கள் பேராதரவு தந்து ராஜாவிற்கு செக் போன்ற படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்து ரசிப்பார்களேயானால் இதுபோன்ற சமுதாய தேவைக்கான படங்கள் நிறைய வரும். மக்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கும். ஏனெனில் விழிப்புணர்வுப் படங்களின் தோல்வியே மசாலா படங்களுக்கு வழிவகுத்து விடும். பிறகு வெறுமனே திரைப்படங்களையும் நடிகர்களையும் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை .

தி மூவிஸ் ஆப் இந்தியா – ரேட்டிங் – 3.8/5

படம் வெற்றி மாபெரும் பெற தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: