“மிஸ் இந்தியா” கீர்த்தி சுரேஷ்

தலைப்பை பார்த்தவுடன் அழகிப்போட்டி தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் விஷயம் அதுவல்ல. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் படத்தின் பெயர்தான்” மிஸ் இந்தியா’.

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படம். “பூவே பூச்சூடவா” பாட்டிக்கும் பேத்திக்கும் ஆன உறவை உணர்வுபூர்வமாக சொல்லியது. இது தாத்தாவுக்கும் பேத்திக்கு மான உறவைச் சொல்வது. தாத்தாவின் கனவை நிறைவேற்ற திருமணமாகாத கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் செல்கிறார். தனியாளாக அங்கு தொழில் தொடங்கி வெற்றி பெறுகிறார்.

தாத்தாவின் கனவை நிறைவேற்றுகிறார். திருமணமாகாத பெண் வெளிநாடு சென்று சாதிப் பதால்” மிஸ் இந்தியா” என்ற தலைப்பை வைத்துள்ளார்கள். சிவா இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் ” நெற்றிக்கண்-2″ வில் தனுஷுடன் ஜோடி சேர்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: