மீண்டும் ஒரு முதல் மரியாதை. ட்ரெய்லர் வெளியிட்ட நடிகர் தனுஷ். Modern டிரெண்டில் நம்ம Classical பாரதிராஜா

தமிழ் சினிமாவின் டாப் 10 படங்களை பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக பாரதிராஜா அவர்கள் இயக்கிய முதல் மரியாதை படம் இடம் பெற்றிருக்கும். 


முதல் மரியாதைை படத்தில் நடிகர் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பும் நடிகை ராதா அவர்களின் நடிப்பும் டைரக்டர் பாரதிராஜா அவர்களின் மகத்தான இயக்கமும் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


 இன்றைக்கும் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புத் தளங்களில் “டைரக்டர் இந்த படத்தில் இந்த மாதிரி ஒரு சாட் வைத்திருப்பார்” என்ற சொல்லடை இல்லாமல் ஒரு நாளைய படப்பிடிப்பு முடியாது. காரணம் டைரக்டர் என்றால் அந்த வார்த்தை இயக்குனர் பாரதிராஜா அவர்களை மட்டுமே சாரும்.

தமிழ்சினிமாவின் வேறு எந்த இயக்குனராக இருந்தாலும் டைரக்டர் என்று சொல்லி அவரது பெயரை சொல்வதுதான் வழக்கம். பெயரைச் சொல்லாமல் #டைரக்டர் என்ற ஒரு வார்த்தையை உபயோகப்படுத்தினால் அது இயக்குனர் பாரதிராஜா அவர்களை மட்டுமே சாரும். 


 அந்த அளவு இயக்கத்தின் இமயம் வரை சென்று தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல உலக சினிமா ரசிகர்களையும் தனது இயக்கத்தால் வியக்க வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள். 
 அவரது இயக்கத்தில் இந்த வருடத்தில் மீண்டும் ஒரு முதல் மரியாதை என்ற புதிய படம் வெளிவர இருக்கிறது. அந்த படம் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு மாறுபட்ட கதையை தழுவியதாக அமைந்துள்ளது. 


அந்த படத்தின் டிரைலரை இன்று தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

https://youtu.be/a7W3jSb0viE

ட்ரெய்லரை வெளியிட தனுசை பாரதிராஜா அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. 

 தமிழ்சினிமா கண்டெடுத்த தரமான நடிகர்களில் இன்றைக்கு கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். பாரதிராஜா போன்ற தரமான இயக்குனர்கள் விரும்பும் நடிகராக தனுஷ் இன்று உருவெடுத்துள்ளார். 

 எனவே இந்த “மீண்டும் ஒரு முதல் மரியாதை” படம் நம்ம தமிழ் சினிமாவின் “டைரக்டருக்கு” மாபெரும் வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்று தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: