#போய்வேறவேலைஇருந்தாபாருங்கடா – தெறிக்கவிடும் விஜய் சேதுபதி. Trend செய்யும் ரசிகர்கள்.

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த IT ரெய்டு தொடர்பான செய்திகள் சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக வந்து கொண்டிருக்கின்றன. 
 அந்த வகையில் பிகில் படத்திற்கு வெளிநாட்டிலிருந்து NGO க்கள் வாயிலாக பணம் பெறப்பட்டதாகவும் அதற்கு கைமாறாக நடிகர் விஜய் அவர்கள் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு துணை போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன. 

அதன் பின்னணியில் ஜேப்பியார் குழுமம் மற்றும் அன்புச்செல்வன்  இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன. 


 இது தொடர்பான ஒரு பதிவை நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ட்விட்டரில், ஒரு செய்திக் குறிப்பை பதிவிட்டு #போய்வேறவேலைஇருந்தாபாருங்கடா என்று ட்விட் செய்துள்ளார். 


 இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் தற்பொழுது டிரெண்ட் ஆகி வருகிறது. 
 உண்மையில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே மதங்களை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பார்ப்பதையே அவர்களின் படங்களில் நாம் இதுவரை பார்த்து வருகிறோம். 

படத்தில் தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதுதான் நடிகர்களின் இயல்பு. படத்தின் கதாநாயகன் எந்த மதம் சார்ந்து கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து கதாநாயகர்கள் அவர்களது நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். 


 சமீபத்தில் வெளியான #பிகில் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவராக நடித்திருப்பார். எனவே அதன் அடிப்படையில் இது போன்ற செய்திகள் உலா வருகின்றன. 


 இதுபோன்ற வதந்திகளை உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ரசிகர்களும் பொதுமக்களும் மதப் பிரிவினை தொடர்பான செய்திகளை பரப்புவதும் கருத்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும். 


 ஏனென்றால் ஒரு கலைஞனுக்கு சாதி மதம் என்ற எந்த அடையாளமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் கலைஞன் அல்ல. 
 இதை ரசிகர்களும் அவர்கள் தங்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்களும் உணர வேண்டும். அப்பொழுது தான் சினிமா சமுதாயத்திற்கானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: