தங்கம் வென்ற அவிநாசி தருண் தெற்கு ஆசிய போட்டியில் அசத்தல்

தற்பொழுது நடந்து வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் அவிநாசியியை சேர்ந்த தருண் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இந்தியா பாகிஸ்தான் உட்பட 8 ஆசிய நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி அசாம் மேகாலயா ஷில்லாங் ஆகிய இடங்களில் நடக்கின்றன. 

ஆண்கள் பிரிவில் நடைபெற்ற தடை தாண்டுதல் போட்டியில் 400 மீட்டர் தூரத்தை 50.54 நொடிகளில் கடந்து இந்த சாதனை புரிந்துள்ளார் தருண். இன்னொரு போட்டியில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், ஹரியானா ஜித்தன்பால், கேரளா குன்னி முகமது ஆகியோருடன் இணைந்து 3 நிமிடம் மற்றும் 6 வினாடிகளில் கடந்து 2-வது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

அவிநாசியைச் சேர்ந்த தருண் அவர்கள் ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு குவகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிபிடத்தக்கது. இந்த சாதனையை அவர் 50.54 செய்தார். 

தருண் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ள ராவுத்தம்பாளையத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தருண் அவர்கள் மங்களூர் ஆழ்வாஸ்  பல்கலைக்கழகத்தில் பி.இ மனிதவள மேம்பாட்டுத் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

பிறந்த ஊர் அவிநாசிக்கு பெருமை சேர்க்கும் தங்க மகன் தருண் அவர்களை தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: