இந்த வார ரிலீஸ் படங்கள். மீண்டும் ஒரு முதல் மரியாதை, பாரம், மாபியா, காட்பாதர், குட்டி தேவதை, கன்னிமாடம்
பிப்ரவரி மாதத்தின் இந்த வாரத்தில் 6 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. மீண்டும் ஒரு முதல் மரியாதை, பாரம், மாபியா, காட்பாதர், குட்டி தேவதை, கன்னிமாடம் என்ற ஆறு படங்கள் தான் இவை.

மீண்டும் ஒரு மரியாதை படம் பாரதிராஜா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவருகிறது. நாயகியாக நக்ஷத்திரா நடித்திருக்கிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளிவருவதால் இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக மாபியா படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் பிரசன்னா வில்லனாக வருகிறார். அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அதே அளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் வெளியிடும் படம்தான் பாரம். இது மத்திய அரசின் தேசிய விருது பெற்ற படம். பிரியா கிருஷ்ணசாமியை இயக்கிய இந்த படம் குடும்பத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும் முதியோரை பற்றிய கதையை தழுவியது.

காட்பாதர் படத்தில் நட்டி நடராஜ் அனன்யா அவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
கன்னிமாடம் படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். புதுமுகங்கள் ஸ்ரீராம் கார்த்திக் சாயாதேவி இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.