வெள்ளைப்பூக்கள் பாகம்-2 தயாராகி வருகிறது. விவேக்கின் அதிரடி த்ரில்லர் நடிப்பை மீண்டும் பார்க்கலாம்

நகைச்சுவை நடிகர் என்று சொல்லடை இனிமேல் நடிகர் விவேக் அவர்களுக்கு பயன்படுத்த முடியாது. காரணம் சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த வெள்ளைப்பூக்கள் படம் அதிரடி த்ரில்லர் கதையாக அமைந்து மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. 

ரசிகர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு திரில்லர் கதையாக அமைந்தது. விவேக் தனது அனுபவ நடிப்பை எதார்த்தமாக கொடுத்து மிக ஆழமான கதாபாத்திரமாக வாழ்ந்திருந்தார். 

எத்தனை புதுமுக நடிகர்கள் வந்து கடினமாக உழைத்து நடிப்பை வெளிப்படுத்தினாலும் சினிமா துறையில் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் சாதாரணமாக அந்த நடிப்பை கொடுத்துவிடுவார்கள்.


 அந்தவகையில் விவேக் நகைச்சுவை பாத்திரமானாலும் சரி குணச்சித்திரப் பாத்திரங்களிலும் சரி கதாநாயகனாக நடித்த படங்களும் சரி அதிகமாக டேக் வாங்காமல் இயக்குனர் எதிர்பார்க்கும் நடிப்பை சர்வசாதாரணமாக கொடுத்து விடுவார் என்பது கோடம்பாக்கம் அறிந்த உண்மை.


 த்ரில்லர் பட வரிசையில் புது அத்தியாத்தை எழுதிய வெள்ளைப்பூக்கள் படம் தனது இரண்டாம் அத்தியாயத்தை உலகுக்கு காட்ட வருகிறது. 


 வெள்ளைப்பூக்கள் படத்தின் இயக்குனர் விவேக் இளங்கோவன் தற்சமயம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எழுத்து பணியை செய்துவருகிறார். 
 விரைவில் படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான கூடுதல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: