திரௌபதி திரைவிமர்சனம் | Draupathi movie review | Draupathi Tamil Movie

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக கருத்தை பகிரங்கமாக பதிவு செய்யும் படம்தான் திரௌபதி. பொதுவாகவே இதுபோன்ற கதைக் கருவை தொட பலரும் தயங்கும் இன்றைய சூழலில் இந்த #திரௌபதி கதைக்கருவை எடுத்ததற்கு இயக்குனர் மோகன் அவர்களுக்கு நாம் ஒரு சல்யூட் செய்யலாம். 

#திரௌபதி படத்தின் கரு.

படத்தின் கதாநாயகனாக ரிச்சர்ட் அவர்களுக்கு கொடுத்த பாத்திரமே சூப்பரான பாத்திரம். அவர் சிலம்ப கலைஞராக வருகிறார். கதாபாத்திரத்தின் பெயர் ராஜ்குமார்.
 கதாநாயகி ஷீலா ராஜ்குமார் அவர்கள் கதாநாயகியின் முறைப்பெண்ணாக நடித்திருக்கிறார். படத்தின் கருவை தாங்கி படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். இவரின் கதாபாத்திரத்தின் பெயர் #திரௌபதி.

கதாநாயகி திரௌபதி அவர்களை கதாநாயகன் ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்கிறார். தனது குடும்பத்தில் நடந்த ஒரு கொலைக்காக கதாநாயகன் ராஜ்குமார் சிறைக்கு செல்ல நேரிடுகிறது.

இந்த சூழ்நிலையில் ஊருக்குள் நடக்கும் சில சமுதாய பிரச்சனைகளில் திரௌபதி தலையிடுகிறார். திரௌபதியின் ஊருக்குள் ஒரு குளிர்பான நிறுவனம் வருகிறது.
 இந்தக் குளிர்பான கம்பெனியை திரௌபதியும்,  ஊர்மக்களும் எதிர்த்துப் போராடுகிறார்கள். 

இந்த சூழ்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக திரௌபதியின் சித்தப்பா கதாபாத்திரம் வருகிறது. இந்த கதாபாத்திரம் தான் படத்தின் கதைக்கருவை ஆரம்பித்து வைக்கிறது.

திரௌபதியின் சித்தப்பா ஊர் தலைவராக வருகிறார். இவருக்கு இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். கதாநாயகியுடன் பயணம் செய்யும் இந்த தங்கை கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் பரபரப்பை கொடுக்கிறது.

திரௌபதியின் சித்தப்பா மகளான இவருக்கும் வேறு ஒருவருக்கும் காதல் திருமணம் நடந்து விட்டது என்ற செய்தி ஊர் முழுவதும் பரவுகிறது.

இந்த சூழ்நிலையில் தனது மகளின் காதல் திருமணத்தை அறிந்து ஊர்த் தலைவரான #திரௌபதியின் சித்தப்பா இறந்துவிடுகிறார். 
 இந்த சூழ்நிலையில் கதாநாயகி கதாநாயகன் ரிச்சர்ட் அவர்களிடம் சில வாக்குறுதிகளை வாங்குகிறார்.

சிறையிலிருந்து வெளிவரும் ரிச்சர்ட் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறாரா இல்லையா என்பது தான் மீதிக்கதை.
 கதாநாயகன் ரிச்சட் அவர்களுக்கும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் அவர்களுக்கும் காதல் திருமணம் நடக்கிறது. அதேபோல் கதாநாயகன் தங்கை கதாபாத்திரத்திற்கும் காதல் திருமணம் நடக்கிறது.

இந்த இரண்டு திருமணத்தை சுற்றித்தான் கதை களம் சூடு பிடிக்கிறது. நாடக காதல் அரங்கேறுகிறது. அந்த நாடக காதலால் குடும்பம் சிதைகிறது.

திரௌபதி படத்தின் கதாநாயகி கார்ப்ரேட் கம்பெனிகள் தமிழகத்தின் நிலத்தடி வளங்களை உறிஞ்சி வியாபாரம் செய்து கொள்ளை லாபமீட்டுவதை எதிர்த்து போராடுவது ஒவ்வொரு இளைஞருக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தான் வாழும் கிராமத்தின், நகரத்தின் நிலத்தடி நீர் வளம், விவசாயம் ஆகியற்றை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு இளைஞருக்கும் உள்ளதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொன்ன இயக்குனருக்கு ஒரு ராயல் சல்யூட்.

நாடக காதல் என்றால் என்ன அந்த நாடகக் காதல் யாரால் தூண்டி விடப்படுகிறது யாரால் நடத்தி வைக்கப் படுகிறது என்பதை விரிவாக படம் விளக்குகிறது.

நாடக காதல் எனும் வலைக்குள் காதலர்களே விழுந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த உண்மை நிஜத்தில் காதல் பருவத்தில் காதலர்களுக்கு தெரிவதில்லை.

உயிரையும் முக்கிய உறவுகளையும் இழந்து பின்பு தான் அந்த நிதர்சனம் காதலர்களுக்கு புரிகிறது. ஆனால் இவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் குளிர் காய்ந்து விடுகிறது என்பதுதான் உண்மை. இதைப் பற்றித்தான் படம் முழுவதும் அலசுகிறது.

திரௌபதியாக நடித்திருக்கும் சில ராஜ்குமார் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமுதாய மக்களுக்காக போராடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

 கதாநாயகன் ரிச்செட்டும் சிறப்பான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு உயிரோட்டமாக நடித்திருக்கிறார். அதில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக கருணாஸ் வருகிறார். பொதுநல வழக்கறிஞராக நடித்திருக்கும் கருணாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உபயோகமான கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

ஆணவக்கொலை பற்றி ப் பேசியிருக்கும் மோகன் அவர்களுக்கு கண்டிப்பாக காதல் திருமணத்தால் ஆணவக்கொலை யை பார்த்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நன்றியை தெரிவிக்கும்.

முறைகேடான பதிவு திருமணங்களுக்கு துணை போகும் நபர்கள் இந்த படத்தின் மூலமே எச்சரிக்கப்படுகிறார்கள்.
காதல் என்னும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இளம்பெண்ணை காதல் வசனங்கள் பேசி மயக்கி காதல் வலையில் முழுவதுமாக விழ வைத்து அந்த மயக்கம் தீர்வதற்குள் திருமணம் செய்து அந்த பெண்ணை அனுபவித்து விட்டு பின்பு அந்தப் பெண்ணையே போகப்பொருளாக வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தும் சிலருக்கு சவுக்கடி கொடுக்கவே இந்த கதாப்பாத்திரங்கள்  அமைக்கப்பட்டிருக்கிறது.

 இந்த நாடக திருமணங்களுக்கு ஒரு கூட்டம் செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்து வைத்துவிட்டு பயனில்லாத தகுதி இல்லாத ஒரு வாழ்க்கையை ஆரம்பித்து வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.

அதன் பிறகு என்ன செய்வது என்று அந்த திருமணமான காதலர்களுக்கு தெரிவதில்லை. திருமணம் செய்துவிட்ட பின்பு வேறு வழியின்றி வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்க்கை நடத்தி தங்களது கனவுகளையும் இலட்சியங்களையும் யாரோ சிலரின் கட்சிப் பசிக்கும் ஆட்சிப்  பசிக்கும் பதவி பசிக்கும் இரையாக்கி விடுகிறார்கள்.

இந்த கதைக்கருவை எடுத்த இயக்குனர் அவர்களுக்கு படத்தில் மற்ற குறைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு ஒரு அப்ளாஸ் கொடுக்கலாம்.

முதல் பாதி பரபரவென்று நகர்கிறது. இரண்டாம் பாதி அதை விட வேகம் கொஞ்சம் குறைவு. திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை ரகம்.

படத்திற்கு பின்னணி இசையை ஜுபின் அவர்கள் சிறப்பாக செய்து கொடுத்து படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். ஒளிப்பதிவு பணியை ஏற்றிருக்கும் மனோஜ் நாராயணனும், எடிட்டிங் பணியை ஏற்றுக் கொண்ட தேவராஜ் அவர்களும் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்,  இளம் வயதில் இருக்கும் காதலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று பதிவிட்டு தி  மூவிஸ் ஆப் இந்தியா திரைப்படத்திற்கு கொடுக்கும் மதிப்பெண் 3.5/5.

#The_Movies_Of_India rating for #draupathi is 3.5/5.

%d bloggers like this: