Mannurunda Song | Mannurunda Song Lyrics | Mannurunda Lyrics | Mannurunda lyrical video | மண்ணுருண்ட பாடல் வரிகள் | மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம் பாரு

சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது பாடலான “மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம் பாரு” வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது.

பாடல் வரிகள் – ஏகாதசி, இசை – ஜி. வி. பிரகாஷ்குமார். எதார்த்தமான எளிமையான அந்த பாடலின் வரிகள் உங்களுக்காக…

பல்லவி 

மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம் பாரு 
கண்ணு ரெண்டும் மூடி புட்டா வீதியிலே போகும் தேரு 
அண்டாவில் கொண்டுவந்து சாராயத்தை ஊத்து 
ஐயாவோட ஊர்வலத்தில் ஆடுங்கடா கூத்து 
ஏழை பணக்கார எல்லாம் எங்கே ஒன்னு பங்கு 
கடைசியில் மனுஷனுக்கு ஊத்துவாங்க சங்கு

சரணம்-1

நெத்தி காசு ஒத்த ரூபா கூட வரும் சொத்து தானே  
செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கிப்போட்டு குத்துவோமே 
சாராயம் குடிச்சவங்க வேட்டி அவுந்து விழுமே  
குடம் உடைக்கும் இடம் வரைக்கும் பொம்பளைங்க அழுகுமே  
ஆயிரம் பேர் இருந்தாலும் கூட யாரும் வரல டா 
அடுக்குமாடி வீடு இருந்தும் ஆறடிதான் மெய்யடா

சரணம்-2
கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா ஐயா ஓடுறது சாக்கடையா 
அந்த மேல் சாதிக்காரனுக்கு அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா 
உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ்சாதி மனுசங்களாம் 
உட்கார்ந்து திங்கறவனெல்லாம் மேல்சாதி வம்சங்களாம்  
என்னங்கடா நாடு அட சாதியை தூக்கிப் போடு 
என்னங்கடா நாடு அட சாதிய பொதைச்சு மூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: