வடுகம் சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள் எழுதிய முதியோர்கள் தின கவிதை.

முதியோர்கள் தினமான இன்று நாடு முழுவதும் மக்களால் முதியோர்களின் தியாகமும், சேவையும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வடுகம் சிவக்குமார் ஐபிஎஸ் அவர்கள் தனது முதியோர்கள்  தின கவிதையை வெளியிட்டிருக்கிறார்.

சமுதாயத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பை செய்து வரும் வடுகம் சிவகுமார் ஐபிஎஸ் அவர்களின் சிறப்பு கட்டுரையை தி மூவிஸ் ஆப் இந்தியா இன்று வெளியிடுகிறது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் வடுகம் என்னும் கிராமத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடித்து கால்நடை  மருத்துவப் படிப்பையும்  முடித்து, தனியார் துறையில் பணியாற்றி பின்பு தமிழக அரசின் முதன்மை தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக பணியில் அமர்ந்து ஒரு சாதாரண கிராமத்து இளைஞனும்  நாடே போற்றும் உயரிய பணியில் அமர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் தான் வடுகம் சிவக்குமார் I.P.S அவர்கள். 


 தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த பொழுது ஏற்பட்ட தமிழின் மீதான காதலால், நிறைய கவிதைகளையும் பாடல்களையும் எழுதத் துவங்கினார். 

 அப்துல் கலாம் பற்றி வடுகம் சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள் எழுதிய பாடல் மிகவும் பிரபலமடைந்து அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவிடத்தில் கல்வெட்டாக உருப்பெற்றிருக்கிறது. வேறு எந்த பெரிய கவிஞர்களுக்கும் வாய்க்காத வாய்ப்பாக நாம் இதைப் பார்க்கலாம். 

 ஏற்கனவே காக்கி பூவின் கவிதைகள் என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அவரின் அடுத்த படைப்பாக தமிழின் கணக்கும் தமிழனின் கணக்கும் என்ற படைப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. 

 தமிழரின் பெருமையான தஞ்சை பெரிய கோவிலை கருப்பொருளாகக் கொண்டு சிவகுமர் ஐபிஎஸ் எழுதிய பாடல், திரைப்பட பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் அவர்களால் பாடப்பட்டது.

 விரைவில் அந்த பாடல் வெளிவர இருக்கிறது. அந்தப்பாடல் பதிவு தொடர்பான சுவாரசியமான ஒரு நிகழ்வை இசையமைப்பாளர் பாமரன் அவர்கள் நமது இணைய தளத்திற்கு பகிர்ந்துள்ளார்.
 அந்த தஞ்சை பெரிய கோயில் பாடலை சீர்காழி சிவசிதம்பரம் அவர்களும் அனுராதா ஸ்ரீராம் அவர்களும் பாடி முடித்து வீட்டுக்குச் சென்று விட்டனர்.

 அன்று இரவு திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் இசையமைப்பாளர் பாமரன் அவர்களை தொடர்பு கொண்டு, இத்தகைய உன்னதமான பாடலை எனக்கு கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

 நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தகைய ஒரு சிறப்பான மெட்டமைந்த முற்றிலும் கருத்தாழமிக்க பாடலை பாடி அதில் நான் நெகிழ்ந்து விட்டேன். எனவே இத்தகைய அருமையான பாடல் பாடியதற்காக ஒரு தொகை வாங்கியதை என் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 எனவே அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறேன். காரணம் அந்தப் பாடலில் உள்ள மெட்டும், கருத்தும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமைந்து விட்டது. எப்போதாவது வருகின்ற இது போன்ற ஒரு நல்ல பாடலுக்கு காசு வாங்கி விட்டோமே என்ற மன வருத்தம் எனக்குள் இருக்கிறது என்று கூறி தொகையை திருப்பித் தர இருப்பதாக கூறியிருக்கிறார் திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள்.

 சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் வார்த்தையில் நெகிழ்ந்து போன இசையமைப்பாளர் பாமரன் அவர்கள் ஐயா வேண்டாம், நீங்கள் உதிர்த்த  இந்த வார்த்தைகளே போதும் மகிழ்ச்சி.  

நீங்கள் மிகவும் கண்டிப்புடன் இதை சொல்வதால் ஒரு மிகச் சிறிய தொகையை எனக்கு அதிலிருந்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள் அதையே நான் முழுமையாக எடுத்துக் கொள்வேன்.

 அதனை உங்கள் ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்வேன் என்று சொல்லி இசையமைப்பாளர் பாமரன் அவர்களும் புலகாங்கிதம் அடைந்துள்ளார்.

 கொரோனா விழிப்புணர்வு குறித்து சிவகுமர் ஐபிஎஸ் அவர்கள் எழுதிய பாடல் சமீபத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. 

ஆசிரியர் தினம் குழந்தைகள் தினம் உட்பட ஒவ்வொரு முக்கிய தினங்களுக்கும் ஒவ்வொரு கவிதையும் பாடலும் எழுதி அந்த தினத்தை சிறப்பாக்கி விடும் சிவகுமர் ஐபிஎஸ் அவர்கள், முதியோர்கள் தினமான இன்று தனது முதியோர்கள் தின கவிதையை வெளியிட்டிருக்கிறார். 

 விரைவில் இந்த முதியோர்கள் தின கவிதையானது பாடலாக வடிவம் பெற இருக்கிறது. இசையமைப்பாளர் பாமரன் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட இருக்கிறார். 

 ஐபிஎஸ் துறையில் பணியாற்றி வரும் சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள், நாட்டிற்காக செய்யும் இடையறாத பணிகளுக்கு இடையில் தமிழ் மீது கொண்ட காதலால் நிறைய கவிதைகளையும் பாடல்களையும் அவ்வப்போது எழுதி வருகிறார். 

 வெறுமனே கவிதை பாடல்கள் என்றில்லாமல் அந்த கவிதைகளும் பாடல்களும் அந்தந்த காலகட்டத்தில் நடைபெற்று வருகின்ற சமுதாய மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் விதையாக இருக்கும் வண்ணம் தனது பங்களிப்பை செய்து வருகிறார். 

 சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை தன் கண்முன்னே கண்டபோதெல்லாம் கவிதை எழுதிய பாரதியைப் போல வடுகம் சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள் நூற்றுக்கும் மேலான கவிதைகள் பாடல்களை எழுதி, அவற்றுக்குள் சமுதாய பதிவுகளை கருப்பொருள் ஆக்கி வருகிறார். 

 இத்தகைய சிறப்பான பங்களிப்பை சமுதாயத்திற்கு செய்து வரும் திரு சிவகுமார் ஐபிஎஸ் அவர்களது பெயரை, தி கோல்டன் மேன் ஆஃப் சொசைட்டி என்ற பிரிவில் விருதுகளை வழங்கி வரும் தி மூவிஸ் ஆப் இந்தியா இணையதளத்திற்கு பரிசீலிக்க அனுப்ப இருப்பதாக கவிஞர் ரக்சகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: