அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் டாக்டர் சேதுராமன், “தேவர் கானம் 2020” பாடல்களை வெளியிடுகிறார்
தேவர் குருபூஜை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் தாண்டி உலகெங்குமுள்ள தமிழர்களால் தேவரின் புகழும் தேவரின் தீரமும், அந்நாளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் வருகின்ற அக்டோபர் 30 அன்று, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்கள் தயாரிப்பில், தேவரின் புகழையும் வாழ்க்கையும் சொல்லுகின்ற வகையில் தேவரின் பாடல்கள் வெளியிடப்பட இருக்கிறது.

டாக்டர் சேதுராமன் அவர்களின் கருத்தாக்கத்தில், இசையமைப்பாளர் பாமரன் இசையமைப்பில், கவிஞர் ஆசிர்வாதம் அவர்கள் வரிகளில் பத்து பாடல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தேவர் புகழ் பாடும் ஓரிரு பாடல்கள் அவ்வப்போது வந்து வந்து கொண்டிருக்கும் சூழலில், பத்து பாடல்கள் என்ற மாபெரும் தயாரிப்பை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்கள் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக மதுரையில் தேவர் ஆலயத்தில் அன்றாடம் தொடர் அன்னதானத்தை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களை பிரபல பின்னணி பாடகர்கள் லட்சுமி நரசிம்மன், அமுருதா, மகாதேவன், அலமேலு மங்கை, விருதை பாலு மற்றும் பாலமுருகன் ஆகியோர் சிறப்பாக பாடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பத்து பாடல்களும் அடங்கிய குறுந்தகட்டை, வருகிற அக்டோபர் 30 அன்று பசும்பொன்னில் டாக்டர் சேதுராமன் அவர்கள் வெளியிட இருக்கிறார்.
இந்த பத்து பாடல்களை வெளியிடுவதற்கான மீடியா ஒத்துழைப்பை தி மூவிஸ் ஆப் இந்தியா வழங்கி வருகிறது.

உலகெங்கும் உள்ள தேவரின் அபிமானிகளும், தமிழர்களும் பெருமை கொள்ளும் வண்ணம் இந்த பத்து பாடல்களை தயாரித்த மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்களை உலகத் தமிழர்கள் சார்பாக இந்த மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது.

தேவரின் புகழ் பாடும் தேவ(ர்) கானம் 2020 என்ற பெயரில் இந்த பத்து பாடல்களும், நமது தி மூவிஸ் ஆப் இந்தியா தமிழ் சேனலில் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறது.