கவிஞர் சுக்ரா எழுதிய பாடல் திரைப்பட இயக்குனர் எடுக்கும் குறும்படத்தில் இடம்பெற இருக்கிறது
திருப்பூரைச் சேர்ந்த கவிஞர் சுக்ரா அவர்கள், அஸ்ட்ராலஜி மற்றும் நேமாலஜி துறையில் மக்கள் அபிமானம் பெற்றவராக விளங்குகிறார். மேலும் இவர் ஒரு கவிஞரும் ஆவார்.

சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். ஏற்கனவே ஒரு தமிழ் திரைப்படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்திருக்கும் சுக்ரா அவர்கள் ஒரு கவிஞராக நிறைய கவிதைகளையும் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

அப்படி அவர் எழுதிய ஒரு பாடல் தான் இயக்குனர் C. S. பரமேஸ்வரன் அவர்கள் இயக்கும் ஒரு குறும்படத்தில் இடம் பெற இருக்கிறது. இயக்குனர் C. S. பரமேஸ்வரன் அவர்கள் ஏற்கனவே ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த குறும்படத்தில் இடம் பெறப்போகும் பாடல் வரிகள் இதோ.
பூமிக்கு வந்த தேவதை
ப்ரொபைலில் தினம்தினம் தேடுறே
புரிஞ்சிக்க முடியல வாடுறே நான்
புதிரான ஒரு ராகம் பாடுறே
ராத்திரி ராத்திரி தூக்கமில்லே - உனை
ரசிச்சுகிட்டேமன ஏக்கம் புள்ளே - அடி
காந்த கண்ணழகி ஏ கருத்த பெண்ணழகி உன்
கன்னத்திலே கிள்ளி கிள்ளி சிரிக்கிறே உன்
கண்ணே நானும் ஜூம் பண்ணி ரசிக்கிறே
ரசிக்கிறே... உன்னை ரசிக்கிறே... ரசிக்கிறே...
உன் ப்ரொபைல் பிக்சர சொன்னேனடி அந்த
தெய்வத்திடம் தினந்தினம் வேண்டி நின்னேனடி
நிலவே நிலவே வாடி நான் பகலில் பார்க்க துடிக்கிறே நீ
கண்ணில் படுவது இல்லை நான்
இரவில் பார்த்து ரசிக்கிறே நீ
நெஞ்சில் வருவது இல்லை அட
ஏ... ஏ... ஏ... ஏண்டி
கனவு காண தூக்கமில்ல உன்னை
கண்ணுல காணாம ஏக்கம் புள்ள அடி
ஐ போன் கேமரா கண்ணே - ஏ
லைஃபே பைத்தியம் ஆச்சடி பெண்ணே
வாட்ஸ் அப்பில் ஒரு சேட் பண்ணல
க்ளோசப்பிலே ஒரு ஷாட் பண்ணல உன்
ப்ரொபைலே திறந்தே ஏ
புத்திய மறந்தேன் உன்
போட்டோவ ரசிச்சே டேட்டாவை முடிச்சே
மயங்குறேண்டி மனசு கலங்குறேண்டி எந்த
புக்கை எடுத்தாலும் தூக்கம் வருது உன்
பேஸ்புக் திறந்தாலே ஏக்கம் வருது
ஒரு ஜென்மம் ஆனாலும் காத்திருப்பே உன்
கை சேர மறுஜென்மம் பார்த்திருப்பே - ஒரு
கால் பண்ணடி ரோசா கால் பண்ணடி"
இதுபோல் நிறைய பாடல்களை கவிஞர் சுக்ரா அவர்கள் திரைப்படங்களுக்கும் எழுத வேண்டும் என தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது.
கவிஞர் சுக்ரா தொடர்புக்கு – 98427 68768