உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் பாடல் வெளியீடு
உலகநாயகன் கமல்ஹாசனின் 66வது பிறந்தநாள் இன்று, உலகநாயகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.
கமல்ஹாசனின் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் இதை அமர்க்களமாக கொண்டாடி வருகின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் பிறந்த நாளுக்கான Common DP யை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் வெளியிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
#LeaderBirthdayCDP மற்றும் #HappyBirthdayLeader என்ற ஹேஷ்டேக்குகளை அவரது ரசிகர்களும் #மக்கள_ நீதி_மய்யம் தொண்டர்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் திரு.A. G. மௌரியா பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பு மக்கள் நீதி மய்யம் அவர்கள், கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பாடலை வெளியிட இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் பிறந்த நாள் பாடலுக்கு இசையமைப்பாளர் பாமரன் அவர்கள் இசையமைக்க கவிஞர் ரக்சகன் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். பாடலை பானுமதி மற்றும் பவன்ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் அந்தப் பாடல் தி மூவிஸ் ஆப் இந்தியா யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 17 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72% ஆகும்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக வடசென்னையில் போட்டியிட்ட ஏ.ஜி. மௌரியா அவர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 567 வாக்குகள் அதாவது பதிவான வாக்குகளில் 10.8 சதவீதம் பெற்று, வடசென்னை தொகுதியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மவர் கமலஹாசன் அவர்கள் காட்டும் வழியில் ஏ.ஜி. மௌரியா அவர்கள் நற்பணிகளை செய்து வருவதோடு மக்கள் நீதி மய்யம் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.