கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குரலில், சிவகுமார் IPS வரிகளில் PC சிவன் இசையமைத்திருக்கிறார்
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் ஒரு வாரங்களுக்கு முன்னதாகவே கொரானா வைரஸ் குறித்த ஒரு விழிப்புணர்வை பாடலை எழுதி இருக்கிறார் சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள்.

இந்த கொரானா வைரஸ் விழிப்புணர்வு பாடலை பிசி சிவன் அவர்கள் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் ரசிக்கும் வகையில் மெட்டமத்து பாடலுக்கு பொருத்தமான இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான இசையை கொடுத்திருக்கிறார் பிசி சிவன் அவர்கள்.

பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர் இந்த பாடலை பாடி அசத்தி இருக்கிறார்கள். வழக்கம் போலவே செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்களின் பாடலில் இருக்கின்ற ஒரு வைப்ரேஷன் இந்த பாடலிலும் இருக்கிறது.

கொரானா வைரஸை கண்டு பயப்படாமல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான பாசிட்டிவ் எனர்ஜியை கொடுப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது பாடலின் வரிகளும் இசையமைப்பும்.