ஜெய்பீம் திரைப்பட விமர்சனம்
இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் செங்கேணி காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன தன் கணவனை கண்டுபிடிக்க நடத்தும் போராட்டமே ஜெய் பீம் திரைப்படம்.

ராஜாக்கண்ணு வாக நடித்திருக்கும் மணிகண்டன் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். பாம்பு பிடித்து வனப்பகுதியில் விடுதல் போன்ற சின்ன சின்ன வேலைகளையும் செய்து வருகிறார்.
ராஜாகண்ணுவின் மனைவியாக செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். தன் கணவன் மீது உயிராக வாழ்ந்து வருகிறார். அப்படி உயிருக்குயிராக இருக்கும் தன் மனைவிக்கு ஒரு கல் வீடு கட்டித் தருவது தன் வாழ்நாள் லட்சியம் என்று சொல்லி அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் ராஜாக்கண்ணு.

ஊர்த்தலைவர் வீட்டில் பாம்பு புகுந்து விட அதை பிடித்து வனப்பகுதியில் விடுகிறார் ராஜாக்கண்ணு.
பாம்பு கடித்த இடத்தில் நகைகள் காணாமல் போய்விட அவர் மீது திருட்டு பழி விழுந்து விடுகிறது. ராஜா கண்ணனின் மனைவி சகோதரி மற்றும் நண்பர்கள் என அனைவரும் காவல்துறை அதிகாரிகளின் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ராஜ கணம் அவரது நண்பர்களும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி விடுகிறார்கள். காணாமல் போன தனது கணவனின் நிலையை அறியாது கர்ப்பிணிப் பெண்ணாக தவிக்கிறார் செங்கேணி.

தன் கணவனை கண்டுபிடித்தாரா அல்லது கணவரின் நிலை என்ன ஆனது அவர்மீது சுமத்தப்பட்ட திருட்டு வழக்கு யார் காரணம் என்பது போன்ற எதார்த்தமான கேள்விகளுக்கு திரைக்கதையில் வைத்து கச்சிதமாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தாசா ஞானவேல். கூடுதல் திரைக்கதை எழுதிய கிருத்திகாவும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
எஸ்ஆர் கதிரின் ஒளிப்பதிவு சிறப்பு. ஷான் ரோல்டன் இசையும் மனதை வருட வைக்கிறது. பிலோமினா ராஜின் எடிட்டிங் படத்திற்கு வலுசேர்க்கிறது.
மசாலா படங்களை தவிர்த்து நல்லதொரு கதையை தேர்ந்தெடுத்து ஆவணப்பட சாயல் இல்லாமல் ஒரு சிறந்த திரைப்படத்தை தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.
ஜெய்பீம் டீமின் வெற்றி உறுதி. ஜெய்பீம் திரைப்படத்திற்கு நமது மதிப்பீடு 4/5.