இது என் காதல் புத்தகம் படம் நேர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது
உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவுக்கு பிறகு உலகசினிமா புத்துயிர் பெற்று வருகிறது.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் உட்பட அனைத்து சினிமாக்களும் மிகப்பெரிய தேக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றன.

அந்தவகையில் இந்த மாதத்தில் வெளிவந்த படங்களே சினிமாவிற்கு புத்துணர்வு கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

தியேட்டருக்கு ஜனரஞ்சகமான ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்துடன் பல பெரிய படங்கள் தங்களது வெளியீட்டை நிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், கதையையும் கதைக் களத்தையும் நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள் வெளிவந்து மக்கள் ஆதரவைப் பெற்று வருகின்றன.

அந்தவகையில் இந்த வாரம் வெளியான இது என் காதல் புத்தகம் திரைப்படம் மூன்றாவது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

பெண் கல்வியை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதால் கதைக்கரு வலுவாகவும், ரசிகர்களை திருப்திப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மூன்றாவது நாளான நேற்று வடபழனி உள்ள கமலா தியேட்டரில் இது என் காதல் புத்தகம் படத்திற்கான மாலை காட்சிகளுக்கு அனேக பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு நல்ல நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை இன்றும் வரும் நாட்களிலும் படத்திற்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட் கொண்டு எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதற்கு தயங்கி வரும் இந்த வேளையில் வலுவான கதை கருவை கொண்டு, தைரியமாக களம் இறங்கி இருக்கும் இது என் காதல் புத்தகம் படக்குழுவை நாம் பாராட்டலாம்.