“இந்தியாவின் விவசாயி” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் தயார்.
இந்தியாவின் விவசாயி என்ற தலைப்பில் ஒரு தனிப்பாடல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் பாமரன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். கவிஞர் ரக்சகன் அவர்கள் பாடலை எழுதி இருக்கிறார். பிரபல திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்கள் பாடலை பாடியிருக்கிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சாதனைகளைச் சொல்லும் வண்ணமும், நரேந்திர மோடி அவர்களை இந்தியாவின் விவசாயி என்ற மையக் கருத்தாக வைத்து இந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.
Plantgene நிறுவனர் திரு முத்துராமன் ஜி அவர்கள் இந்த பாடலைத் தயாரித்திருக்கிறார்.

திரு முத்துராமன் ஜி அவர்கள் நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர். நஞ்சாகி போன மண்ணை மீட்டெடுத்து அதற்கு அமுத(இயற்கை) உரம் அளித்து இந்த பூமியை காப்பதில் அவர் மாபெரும் சாதனை புரிந்து வருகிறார்.
பாரதப் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மேல் கொண்ட அன்பாலும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் தமிழக பா. ஜ. க தலைவர் எல் முருகன் அவர்கள் மேல் உள்ள பற்றாலும் சமீபத்தில் தன்னை பிஜேபியில் இணைத்துக்கொண்டார்.
அவருக்கு மாநில விவசாய அணி துணைத்தலைவர் என்ற பதவி தந்து தலைமை அழகு பார்த்தது.

பாஜகவின் மாநில விவசாயிகள் அணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் திரு முத்துராமன் ஜி அவர்கள் பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றி வருகிறார்.
அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 17 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் வருகிறது. எனவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடலாக இந்தப் பாடலை தயாரித்திருக்கிறார்.

சென்னையின் முன்னணி ஒலியமைப்பு கூடத்தில் பாடலின் இசைக்கோர்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், பாடலுக்கான எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது.
வருகின்ற செப்டம்பர் 17 அன்று பாரத பிரதமரின் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலாக இந்த பாடல் மிக சிறப்பாக வெளியாக இருக்கிறது.