பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

விழா தொடர்பான முக்கிய நிகழ்வுகளை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக இணை பொதுச்செயலாளர் எம் செந்தூர்பாண்டியன் அவர்கள் நமக்கு தெரிவிக்கையில்,
“விழாவிற்கான மொத்த ஏற்பாடுகளையும் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் என் சேதுராமன் அவர்கள் சிரத்தையோடு மேற்பார்வையிட்டு வருகிறார். அவர்களின் வழிகாட்டுதல்படி விழாவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

காலை 9 மணி அளவில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பத்து பாடல்களுக்கான குறுந்தகட்டை வெளியிட, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக செயலாளர் எஸ் ஆர் தேவர் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
அதன்பிறகு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் என் சேதுராமன் அவர்களின் ஏற்பாட்டின் படி, விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட இருக்கின்றது.

காலை பத்து முப்பது மணிக்கு மேல், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்களின் அழைப்பை ஏற்று 113 வது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அன்னதான பந்தலுக்கு வந்து பார்வையிடவும் இருக்கிறார்.

தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் SR தேவர் அவர்கள் செய்து வருகிறார்கள்.
விழாவின் நிறைவாக பொருளாளர் VP பாண்டி அவர்கள் நன்றியுரை ஆற்ற இருக்கிறார்கள்.
மொத்தத்தில் தேவர் ஜெயந்தி விழாவானது அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் அங்கத்தினர் அனைவரும், அவர்களது வீட்டு சிறப்பான சுப நிகழ்வாக எண்ணி மகிழ்ந்து ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.