Shree Sisters பாடிய அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை பாடல் வெளியீடு

நீண்ட வருடமாக நடந்து வந்த அயோத்தி வழக்கு முடிவடைந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. 
 அதனை அடுத்து ஆகஸ்ட் 5, இன்று இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவிருக்கிறது. 

 இந்த பூமி பூஜையை நாடுமுழுவதும் உள்ள இந்து மக்களும், உலகெங்கும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களும் பெரிய விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். 

 இந்த மாபெரும் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜையை கொண்டாடும் வண்ணமாக, அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பூமிபூஜை மையப்படுத்திய பாடல் வெளியாகிறது. 

 கவிஞர் ரக்சகன் அவர்கள் பாடல் எழுதி இருக்கிறார். இசையமைப்பாளர் பாமரன் அவர்கள் இசையில், Shree Sisters (தேஜாஸ்ரீ மற்றும் தர்மஸ்ரீ)  என்ற சகோதரிகள் பாடியிருக்கிறார்கள். 
 சென்னையில் கர்நாடக சங்கீதம் பயின்றுவரும் தேஜாஸ்ரீ மற்றும் தர்மஸ்ரீ  சகோதரிகள் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 இசையமைபாளர் பாமரன் அவர்கள் கூறுகையில்,  Shree Sisters தேஜாஸ்ரீ மற்றும் தர்மஸ்ரீ  சகோதரிகள் அவர்களுக்கு திரைத்துறையிலும் இசைத்துறையிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

 கவிஞர் ரக்சகன் அவர்கள் கூறுகையில், சங்கீத உலகில் பல சகோதரிகளைப் பார்க்கிறோம். ஆலத்தூர் சகோதரர்கள், சூலமங்கலம் சகோதரிகள், நீலா குஞ்சுமணி,  கணேஷ் குமரேஷ்,  கர்நாடகா பிரதர்ஸ் மற்றும் நந்தினி காயத்ரி என்று பலர் உள்ளனர். 

 அந்த வரிசையில்,  Shree Sisters (தேஜாஸ்ரீ மற்றும் தர்மஸ்ரீ)  சகோதரிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: