83 விமர்சனம்
1983 ஆம் வருடம் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடித்திருக்கிறார். உலக கோப்பையை சந்திக்க ரன்வீர் சிங் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானம்செல்கிறது.
பல தடைகளை தாண்டி ஒவ்வொரு போட்டிகளிலும் ஜெயிக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையை வெல்கிறது.

லார்ட்ஸ் மைதானத்திற்குள் செல்வது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு அங்கு முறையான மதிப்பு கொடுக்கப்பட்டதா என்பதையும் படம் அலசுகிறது.
ரன்வீர் சிங் அடிக்கும் பந்தை ஒரு ரசிகராக மைதானத்தின் வெளியே இருந்து கபில் தேவ் கேட்ச் பிடிக்கும் காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கிறது.
அமர்நாத் கதாபாத்திரம் பேட்டிங் செய்யும் முறையைப் பார்த்து அவரது ரசிகராக அவரே நடித்து கமெண்ட் கொடுக்கும் காட்சிகள் மிகவும் ரசனைக்குரியவையாக அமைந்திருக்கிறது.

இந்திய அணி வெற்றி பெற்றாலும் கூட அதற்கான உரிய அங்கீகாரம் அங்கு கிடைத்த இருக்கிறது என்பது கேள்விக்குறியே.
பேருந்தில் அமர்ந்து கேப்டன் ரன்வீர் சிங் தனது வீரர்களுடன் டிஸ்கஷன் செய்யும் பொழுதும் அவர்களுக்கு உத்வேகம் செய்யும் பொழுதும் ஒரு இந்தியனாக தேசப்பற்றை நமக்கு அந்த காட்சிகள் உணரவைக்கிறது.
1983 ஆம் வருடம் நடந்த உலக கோப்பையில் இடம் பெற்ற வீரர்களைப் போலவே முகபாவனையும் உடல் அமைப்பும் கொண்ட நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததிலேயே இயக்குனர் கபீர் கான் ஜெயித்துவிட்டார்.
அசீம் மிஸ்ரா ஒளிப்பதிவில் பின்னி எடுத்திருக்கிறார். ஜூலியஸ் படத்தின் பின்னணி இசை பக்கா ரகம்.
மொத்தத்தில் படம் தேசப்பற்றையும், வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவும், 1983 ஆம் வருட உலகக் கோப்பையின் மூலம் இந்தியா உலக அந்தஸ்தில் ஒருபடி மேலே சென்றதையும் இன்றைய இளம் தலைமுறை உணர மிகச் சிறந்த திரைப்படமாக வந்திருக்கிறது.
கபில்தேவ் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பின் பலனே உலககோப்பை என்பதை உணர முடிகிறது.
எதற்காக படம் எடுக்கப்பட்டது அதை படம் செய்துவிட்டது. இப்படி ஒரு படத்தை கொடுத்ததில் படக்குழு மார்தட்டிக் கொள்ளலாம்.
அனைவரும் பார்க்க வேண்டிய அற்புத படைப்பு.
நன்றி
தி மூவிஸ் ஆப் இந்தியா.