பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பாடல்களை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிடுகிறார்
தேவர் குருபூஜை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் தாண்டி உலகெங்குமுள்ள தமிழர்களால் தேவரின் புகழும் தேவரின் தீரமும், அந்நாளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் வருகின்ற அக்டோபர் 30 அன்று, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்கள் தயாரிப்பில், தேவரின் புகழையும் வாழ்க்கையும் சொல்லுகின்ற வகையில் தேவரின் பாடல்களை தயாரித்திருக்கிறார்.
பத்து பாடல் அடங்கிய இசைத் தட்டை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிடஇருக்கிறார். மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனர் டாக்டர் N சேதுராமன் அவர்கள் இசைத்தட்டை பெற்றுக் கொள்கிறார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச் செயலாளர் S.R.தேவர் அவர்களும் துணை பொதுச் செயலாளர் செந்தூர் பாண்டி அவர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
தேவரின் புகழ் பாடுவதோடு மட்டுமில்லாமல், தேவரின் புகழைப் பரப்புவதிலும், தேவர் சொன்ன நல்ல வாழ்வியல் கருத்துக்களையும் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கில் டாக்டர் என் சேதுராமன் அவர்கள் இந்த மிகப்பெரிய பாடல் தயாரிப்புப் பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

டாக்டர் N சேதுராமன் அவர்கள், தேவர் சிலைக்கு மலர் வளையம் வைக்கும் பழக்கத்தை மாற்றி மலர் மாலை சாற்றும் வழக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சேதுராமன் அவர்களின் கருத்தாக்கத்தில், இசையமைப்பாளர் பாமரன் இசையமைப்பில், கவிஞர் ஆசிர்வாதம் அவர்கள் வரிகளில் பத்து பாடல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தேவரின் புகழ் பரப்பி அவர் வழியில் வாழும் டாக்டரின் சேதுராமன் அவர்களது சமூக சேவை மென்மேலும் தொடர்ந்து பெரும் புகழ் அடைய தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது