எதிர்பார்ப்புகளை கூட்டும் PAN INDIA MOVIE – விபரீதம்
ஸ்டீபன் எம். ஜோஸப் இயக்கத்தில் AVI மூவி மேக்கர்ஸ் பேனரில், Crystal Jeyaraj தயாரிப்பில் உருவாகியிருக்கும் பன்மொழி திரைப்படம்தான் விபரீதம்.
படத்தின் தலைப்பான #விபரீதம் என்ற பெயருக்கேற்ப தற்கொலைக்கு எதிரான சமூக கருத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லவிருக்கும் பக்காவான கமர்ஷியல் படமே விபரீதம்.
வரும் டிசம்பரில் பல மொழிகளில் வெளிவர இருக்கும் இந்த படத்திற்கான முன்னோட்டம்.
படம் முழுக்க முழுக்க #இடுக்கி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் வைத்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். குறிப்பாக இடுக்கி பகுதியில் இதுவரை யாருமே படப்பிடிப்பு தலமாக பயன்படுத்தாத புதிய இடங்களை தேர்வு செய்து இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார். கேமரா முழுக்க பசுமையும் பசுமை சார்ந்த இடமுமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. தற்கொலை வேண்டாம் என்று சொல்லும் ஒரு RAP பாடலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராபிக்ஸ் காட்சிகளுடன் குழந்தைகளை கவரும் Jungle BRO பாடல் ஒன்றும், காதலர்களை டார்கெட் செய்யும் மெலடி பாடல் ஒன்றும், இளசுகளை சூடேத்தும் ஒரு ஐட்டம் சாங் என்று கலந்துகட்டி பாடல்களை அமைத்திருக்கிறார்கள்.
படத்தில் அபய் ஷங்கர் கதாநாயகனாக நடிக்க, ரேவதி வெங்கட் கதாநாயகியாக இருவரும் அசுரத்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள் என்கிறது படக்குழு.

படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தத்ரூபமான மேக்கப் தேவைப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு சவாலான மேக்கப் பணியை #கலைவாணி முடித்திருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனராக #டயானா அழகூட்டியிருக்கிறார். நடன அமைப்பாளராக #ஜெய் அசத்தியிருக்கிறார்.ஒளிப்பதிவை #ஆறுமுகம் ஏற்றிருக்கிறார்.
சண்டைக்காட்சியை #ஜாக்கி-ஜான்சன் ஏற்று அதிரடி கொடுத்திருக்கிறார். பின்னணி இசையை இத்தாலியைச் சேர்ந்த #FRANCESCO-TRESCA ஏற்றிருக்கிறார்.
படத்திற்கு இசையமைப்பாளர் KK, ரோபின் ராஜசேகர், V அருண், AS விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் பாடல் பதிவை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்கள். படத்தில் மூன்று பாடல்களை கவிஞர் ரக்ஜகன் எழுத ஒரு பாடலை V அருண் எழுதியிருக்கிறார்.
படத்தில் நடித்துள்ள காட்டுவாசிகள் கதாபாத்திரங்கள் பேசும் “காரித் தமிழ்” என்ற புதிய மொழியை கவிஞர் ரக்ஜகன் வடிவமைத்திருக்கிறார். திராவிட மொழிக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு பேசப்படும் மொழியாக இந்த மொழியை வடிவமைத்திருக்கிறார்.
விரைவில் இந்த படத்துக்கான #First-Look போஸ்டர் தமிழகத்தின் முன்னணி திரை நட்சத்திரங்கள் வெளியிட இருக்கிறார்கள்.
தென்னிந்தியாவில் இருந்து வெளியாகும் சிறப்பானதொரு #PAN-INDIA-MOVIE ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.