ஆலன் பார்டர் ஆர்ட்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கூர்க் பகுதியில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது

ஆலன் ராஜ் அவர்கள் தனது ஆலன் பார்டர் ஆர்ட்ஸ் பேனரில் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கூர்க் பகுதியில் நடைபெற இருக்கிறது.


 இளம் இயக்குனர் ஹரிஸ் ஜெயன் இயக்க, கதை திரைக்கதை வசனத்தை கவிஞர் ரக்சகன் செய்து கொடுத்திருக்கிறார்.


 டைம் லூப் முறையை அடிப்படையாக வைத்து ஆங்கில திரைப்படங்கள் முதலில் வந்த வண்ணமிருந்தன. அதே முறையில் நிறைய தமிழ் மற்றும் இந்திய மொழித் திரைப்படங்கள் தற்பொழுது வந்த வண்ணம் இருக்கின்றன.


 அந்த வழியில் இந்த புதிய திரைப்படமும் டைம் லூப் முறையை அடிப்படையாக வைத்து உருவாகிக் கொண்டிருக்கிறது.
 படத்தின் ஒளிப்பதிவை புதுமுக ஒளிப்பதிவாளர் மகத் ஏற்க இசையை ஜனகன் செய்து கொடுத்திருக்கிறார்.


 விரைவில் படத்திற்கான அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: