சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் குரலில் பாடலாக இசையமைக்கப்படுகிறது ராஜ ராஜ சோழன், பெருவுடையார் கோவில் வரலாறு.
ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் சிறப்பாக நடந்து முடிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சிவ பக்தர்கள் தஞ்சை பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் இந்தியாவை தாண்டி உலகமெங்கிலும் உள்ள ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தஞ்சை பெரியகோயிலின் பெருமையை உலகுக்கு எடுத்துச் செல்ல தஞ்சை பெரிய கோயிலை உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை தன்னார்வலர்கள் தஞ்சையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மகுடமாக ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார் ஐபிஎஸ் அவர்கள் தஞ்சை பெரிய கோவில் வரலாற்றையும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் வாழ்க்கையையும் பாடல் வடிவில் எழுதி இருக்கிறார். அந்தப் பாடலுக்கு சிறப்பான முறையில் இசைவடிவம் கொடுத்து ராஜராஜனுக்கும் பெருவுடையாருக்கும் மேலும் பெருமை சேர்க்க எண்ணினார்.

அந்தப் பாடலுக்கு மெட்டு அமைக்கும் பணியில் இசையமைபாளர் பாமரன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். பாடல் பதிவிற்கான ஒருங்கிணைப்பு பணியில் கவிஞர் ரக்சகன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். பாடலுக்கான ஊடக உதவிப் பணியை நமது தி மூவிஸ் ஆப் இந்தியா இணையதளம் செய்து தருகிறது. தற்போது சென்னையில் இந்த பாடலுக்கான இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.
சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் குரலில் பாடல் பதிவானது சென்னையின் முன்னணி ஒலிப்பதிவு கூடத்தில் மிக விரைவில் நடைபெற இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலுக்கும் ராஜராஜ சோழனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த பாடல் இசையமைக்கப்பட்டு பின்பு சிறப்பான முறையில் இந்த பாடல் வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.