வெற்றிகரமாக நிறைவடைந்தது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா. தமிழக முதல்வர் துணை முதல்வர் இருவரும் டாக்டர் என் சேதுராமன் அழைப்பையேற்று விழாவில் பங்கேற்பு.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் என் சேதுராமன் அவர்களின் சரியான வழிகாட்டுதல் மற்றும் திட்டமிடுதலின் படி தேவர் ஜெயந்தி விழா இனிதே நடைபெற்றது.
பத்து பாடல் அடங்கிய Youtube லிங்கை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக twitter வாயிலாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் tweet செய்தார்.

பத்து பாடல் அடங்கிய குறுந்தகட்டை மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டார்.

தேவர் ஜெயந்தி விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்ட இந்த பத்து பாடல்கள் மூலம், தேவரின் புகழ் பரப்புவதோடு மட்டுமலலாமல், தான் ஒரு சிறந்த தேவர் பக்தன் என்பதையும், தேவரின் குணநலன்களை இனிவரும் சந்ததிகளும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கும் வாய்ப்பாக இந்த பத்து பாடல்கள் அமையும் என்பதையும் டாக்டர் N சேதுராமன் அவர்கள் இந்த விழா வாயிலாக பதிவு செய்துள்ளார்.

தேவர் ஜெயந்தி விழா ஆரம்பம் முதல் விழாவின் நிறைவு வரை, மிகவும் கட்டுக்கோப்புடனும் கட்டுப்பாடுடனும் நடைபெற்றது என்பது டாக்டர் என் சேதுராமன் அவர்களின் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் காட்டுகிறது.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக செயலாளர் எஸ் ஆர் தேவர், பொருளாளர் VP பாண்டி மற்றும் இணை பொதுச் செயலாளர் M செந்தூர்பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் டாக்டர் N சேதுராமன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மிகச் சிறப்பாக விழாவிற்கு உழைத்திருக்கிறார்கள்.

தேவர் வழியில் வாழும் டாக்டர் N சேதுராமன் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் போலவே மேலும் பல சாதனைகள் புரிய தி மூவிஸ் ஆப் இந்தியா வாழ்த்துகிறது