காதல் வலியை சொல்லும் தமிழ் ஆல்பம் “The Pain Of Love” வெளிவர இருக்கிறது.

தொல்லைபேசி, உயிருக்கு உயிராக, ஒருகூடைமுத்தம், செம்புலம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் #Sulakshadaddy. மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிமாற்று படங்களில் பணியாற்றியவர். இவரின் இசையில், கவிஞர் #ரக்சகன் பாடல் வரிகளில் “The Pain Of Love” ஆல்பம் வெளிவருகிறது.

mei-3

காதலின் வலியை சொல்லும் ஆறு  பாடல்கள்  இதில் இடம்பெறுகிறது. பொதுவாக காதலின் மகிழ்ச்சியை சொல்லும் பாடல்களே அதிகமாக வெளிவரும் சூழலில் காதல் தோல்வி, காதலர்பிரிவு, காதலர்களுக்குள் வரும் ஊடல் இவ ற்றை கருவாக வைத்து இந்த தமிழ் ஆல்பம் வெளிவருகிறது.

விரைவில் பிரபல திரை நட்சத்திரங்கள் இந்த ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள்

காதல் வலியை உணர்ந்தோருக்கான மருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: