தளபதி 65!.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..இயக்குனர் இவர்தான்…

தளபதி 63 ஆக அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகிய படம் பிகில். தற்போது தீபாவளிக்கு ரிலீசாகியுள்ள படம் ரசிகர்களை சற்று ஏமாற்றியுள்ளது. இந்நிலையில் இதனையடுத்து தளபதி 64 இதுவரை பெயரிடப்படாத இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி இணைவது இன்னும் அதிக எதிர்பார்ப்பை தளபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் கூட்டியிருக்கிறது.

vg

மேலும் பெயரிடப்படாமல் தளபதி 64 படத்தின் படபிடிப்பு தொடங்கிய நிலையில் தளபதி 65 படம் குறித்த அறிவிப்பையும் தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் தளபதி 65 படத்தை இயக்குனர் பேரரசு அவர்கள் தான் இயக்கப்போவதாக தகவல் கசிந்த நிலையில் பேரரசு அவர்களே அதற்கும் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

4-large-1568702740

விஜய் அவர்களுக்கு கதை தயாராகவுள்ளது. நானும் அவரோடு இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.ஆனால் இதுவரை உறுதியாகவில்லை என பேரரசு அவர்களே தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களாக இருக்க வேண்டும் எனவும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் எனவும் ஒரு தரப்பு ரசிகர்களும், ஷங்கர் தான் இயக்குனராக இருக்க வேண்டும் மற்றொரு தரப்பும், கார்த்திக் சுப்புராஜ் அல்லது வெற்றிமாறன் அவர்கள் தான் இயக்க வேண்டும் என ஒரு தரப்பும் எதிர்ப்பார்ப்போடு தங்கள் தளபதியை வேறு வேறு கோணங்களில் பார்க்க காத்திருப்பது குறித்து டிவிட்டரில் ஹாஷ் டாக் மூலம் பகிர்ந்துவருகின்றனர்.

thalapathy-65

சீக்கிரமா தளபதி 65 குறித்து நல்ல செய்தி ரசிகர்களை குசிப்படுத்தும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். வி ஆர் வெய்டிங் தளபதி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: