பாகுபலியை ஜெயிப்பாரா சாகோ…திரைவிமர்சனம்.

ஹிட் கொடுத்தே ஆகவேண்டுமென  கிளம்பியிருகிறார் சாகோ . இளம் இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் பிரபாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாகோ திரைப்படம் மூன்று மொழிகளில் இன்று வெளிவந்துள்ளது.

6225255110619251473

உலக அளவில் தேடப்படும் மிகப்பெரிய பேமஸ் கேங்க்ஸ்டர் ராய், இந்தியாவில் கால்பதிக்க முயற்சிக்க எதிரிகளால் தாக்கப்பட்டு இறந்துபோகிறார்.

அப்படி அவர் தாக்கப்படும்போது அவர் கொண்டு வரும் பல கோடி ரூபாய் பணங்களும் தீயில் கருகியது. கேங்கஸ்டரின் மகனான் அருண்விஜய் வழக்கம் போல ரகசியம் அறியவும் மேலும் பணம் எவ்வளவு எங்கே இருக்கிறது என அறியவும் முயற்சிக்கிறார்.

71cfec976bfadb375b35fb22755faf2a

அப்பொழுதுதான் ப்ளேக் பாக்ஸ் கிடைத்தால் ரகசியம் கிடைக்கும் என ஆட்களை அனுப்புகிறார். அப்படி அந்த விஷயம் அறிந்து அருண் விஜய் ஆட்கள் மட்டுமின்றி பல கேங்க்ஸ்டர் கூட்டம் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. அடுத்த கேங்ஸ்டர் நான் தான் என்ற வழக்கமான போட்டி வேறு.

இப்போதான் நம்ம ஹீரோ பிரபாஷ் ப்ளேக் பாக்சை தேடி அதனை கைப்பற்றியும் விடுகிறார். இதனையடுத்து அவர் தெரிந்துகொண்ட ரகசியங்கள் என்ன என்ன அதன் பின் நடந்தவை என்ன என்பதே படத்தின் கதை.

EDK2mF8XUAEeLZb

வழக்கமான கதை என்றாலும் திரைக்கதையில் சொதப்பி விட்டதாக ரசிகர்கள் ஏமாற்றம். இன்டர்வல் வரை சண்டை காட்சிகள் மட்டுமே நம்மை எழுப்பி உற்சாகப்படுத்துகின்றன.

ஹாலிவுட் ரோபோ ஹீரோக்கள் போல நம்ம ஹீரோ எப்பவும் ஸ்ட்ராங்காவே காட்றதே லாஜிக் மிஸ்ஸிங். இதுல பத்தாயிரம் பேர் சுட ஒரே ஒரு குண்டடி , இரண்டாயிரம் பேரை கொள்வது எல்லாம் ரொம்பவே ஓவருங்க..

saaho-tam-20190829141842-1065

பிரபாஷ்க்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் கொஞ்சம் கூட செட்டே ஆகல.. இதற்கிடையில் சம்பந்தமில்லா டூயட் வேறு.. பாகுபலி படத்தை நிச்சயம் மிஞ்சாது என்பதே உண்மை.

என்னதான் லாஜிக் மிஸ் ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை என்பதுபோலத்தான் டிவிட்டர் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிப்ரானின் இசை மிரட்டியுள்ளது. ஒளிப்பதிவு கட்சிதம். 300 கோடி ரூபாய் பட்ஜெட் கொஞ்சம் ஜாஸ்திதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: