ஆஸ்கரை வெல்லட்டும் ‘ஒத்த செருப்பு – SIZE-7’ – வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்.

சிறந்த டைரக்டர், நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி சிறந்த ரசிகன் என்பதே பார்த்திபனுக்கு பொருந்தும். ஏனெனில் உலகின் சிறந்த படைப்பாளிகள் எல்லாம் சிறந்த ரசிப்புத்தன்மை கொண்டவர்களே.

1989-ல் புதிய பாதை வெளிவந்து வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரிந்ததே. முதல் பட ம், பெரும் வெற்றி பல இயக்குனர்களின் அடையாளம். ஆனால் அதைத்தாண்டி ‘புதிய பாதை’ தமிழ்நாடு அரசின் பாராட்டைப் பெற்றது. காரணம் அன்றைய கால கட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா போன்ற நடுத்தர நாடுகளில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. 

அரசுகள் கூட இந்தப் பிரச்சனைக்கு பாலியல் விழிப்புணர்வு, குடும்பக் கட்டுப்பாடு என்ற எத்தனையோ முயற்சி செய்து கொண்டிருந்தன. அன்றைய சூழலில் ஒரு மசாலா ஜானர் படத்தில் சமுதாய சீரழிவை சொல்லும் தனித்தன்மையே இன்றும் பார்த்திபன் நிலைத்து நிற்கக் காரணம். இந்திய சினிமாவில் இப்படி மாறுபட்ட சிந்தனை கொண்ட படைப்பாளி பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபனே. 


புதியபாதை, லெபனான் நாட்டு கவிஞன் கலீல் கிப்ரானின் சமுதாய விழிப்புணர்வுக்கான சவுக்கடி கவிதைகளை ஒரு மசாலா படத்தில் வைத்து ரசிக்க வைத்தது.

இன்றைய தேதியில் ‘புதிய பாதை’ குறித்து இவ்வளவு விரிவான விளக்கம் சொல்லக் காரணம் இன்றைய இளையதலைமுறைகள் போகிற போக்கில் ஒரு சிறந்த படைப்பாளிக்கு, அவனது அறிய புதிய படைப்பிற்கு உலக அங்கீகாரம் வாங்கி கொடுக்கத் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே. 

சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’ திரைப்படம் போன்று ஒரு படம் தன் வாழ்க்கையில் பார்த்ததில்லை என்ற கருத்தை இசையமைப்பாளர் பாமரன் நமது இணையதள நிகழ்வில் பகிர்ந்து கொண்டார் என்பதை பெருமையோடு பகிர்கிறோம்.

குடைக்குள் மழை படம் பொருளாதார வெற்றி-தோல்வி தாண்டி தலைப்பிற்கே வரவேற்பை பெற்றது.

ஆயிரத்தில் ஒருவனில் பார்த்திபன் நடிக்கவில்லை. மனிதர் வாழ்ந்திருப்பார்.

தன் வாழ்வாதாரத்திற்க்காக படம் செய்யும் ஒரு படைப்பாளி ‘OS#7’ போன்ற புது முயற்சி செய்ய வாய்ப்பே இல்லை. தன் வாழ்வாதாரம் தாண்டி முப்பது வருடங்களாக பார்த்திபன் என்ற படைப்பாளி சமுதாய சிந்தனையை தன் ஒவ்வொரு படைப்பிலும் வைத்து ரிஸ்க் எடுத்தே வந்திருக்கிறார் என்பதே உண்மை.

சினிமாவில் ஒரு பெரிய தோல்விக்குப்பின் காணாமல் போன சிறந்த படைப்பாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். வெற்றி தோல்வி தாண்டி தன் தனித்திறமையால் நிலைத்திருப்பவர் பார்த்திபன்.

மசாலா படங்களுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் ‘OS#7’ போன்ற படங்களே தமிழ் சினிமாவை உலகம் திரும்பி பார்க்க வைப்பவை என்பதை உணர வேண்டும்.

ஒரு கதாபாத்திரம் மட்டுமே கொண்டு படத்தில் நடித்து, இயக்கி இருப்பதற்கு எத்தகைய நம்பிக்கை, உழைப்பு, அசாத்திய தைரியம் வேண்டும் என்பது சினிமா உலகம் அறியும். 

‘OS#7’ வெளிவந்த பிறகு பார்த்திபன் உலகின் தலைசிறந்த நடிகர் வரிசையில் போய் அமர்ந்து விடுவார் என்பது திண்ணம்.

எனவே ‘OS#7’ படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் போது அடுத்த தலைமுறை புது படைப்பாளிகளுக்கு ‘புதிய பாதை’ வகுத்து தரும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களே ஆஸ்கார் வெல்லும் வாய்ப்பை பெறுகின்றன. 

எனவே ஆஸ்கர் நாமினேஷன் தண்டி ஆஸ்கர் வெல்லட்டும் ‘OS#7’ என்று தமிழ் சினிமாவின் ஒருமித்த குரலாக பதிவு செய்வோம்.

வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: