10000 பனை விதைகள் மற்றும் மரம் நடுதல் !!முன்னெடுக்கும் தனிமனிதன்!! கைகோர்க்கும் எக்ஸ்னோராவும் மற்றும் பலரும்

மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நகரகங்கள் பெருகின. மனிதன் காடுகளை அழித்து விவசாய நிலங்களை அழித்து வீடுகளையும், போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்க சாலைகளையும் உருவாக்கினான். அதோடு ஆறு, ஏரி, குளம், குட்டைகள் என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியதோடு இருப்பதையும் பாதுக்காக்க மறந்தான்.

5502d76a-e2ae-4590-af8f-786f5a1bcca9.jpg

மரங்கள் தொலைந்ததும் காற்று, மழை அதோடு மண்ணரிப்பில் இருந்து பாதுகாப்பு என அனைத்தையும் தொலைத்தோம். நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க மறந்தோம் நீர் ஆதரங்களைத் தொலைத்தோம்.
இந்நிலையில் மீண்டும் நாம் தொலைத்ததை மீட்டெடுக்கும் முயற்சியில் பலரும் தங்கள் கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்க பல திட்டங்களை முன்னெடுத்து ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

16-1402895736-panai-marangal-600

அவ்வகையில் பல்வேறு அமைப்புகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் குறிப்பாக எக்ஸ்னோரா என்ற அமைப்பு நீர் நிலைகளை தூர்வாருதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சி மற்றும் தற்போதுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்ச்சி செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களை பல இடங்களிலும் செயல்படுத்தி வருகின்றனர்.

download (10)

இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் ஜானகிராமன் எக்ஸ்னோரா அமைப்பின் உதவியோடு தன்னுடைய சொந்த ஊரின் நிலை கண்டு அக்கரையோடு ஊரின் நீர்நிலைகளை மீட்டெடுத்து மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி எக்ஸ்னோரா அமைப்பின் கிளையை தனது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டத்தைத் சேர்ந்த திருவாங்காரனை கிராமத்தில் நிறுவியுள்ளார்.

images (2)

இதனையடுத்து ஜானகிராமன் வருகின்ற அக்டோபர் மாதம் 8ம் தேதி எக்ஸ்னோரா கிளையின் துவக்கவிழா மற்றும் 10000 பனைவிதைகள் மற்றும் மரம் நடும் விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இவ்வமைப்பின் தலைவர் நேரு அவர்கள் தலைமையேற்கிறார்.

434ee993-14f0-4bd8-8e01-5a5fe4ac4458

இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மோகன் கிருஷ்னன் முன்னிலை வகிக்க பொருளாளர் அரவிந்தசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். விஜய் மோகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நன்றியுரை ஆற்றுகின்றனர்.

72309_1493912510

திரைப்பட நடிகர் சவுந்தரராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தருகிறார். மேலும் திரைப்பட இசை அமைப்பாளர் திரு.பாமரன், முன்னாள் தலைவர் திரு.குப்பன், சத்தியநாராயணன் உட்பட ஊர் பொதுமக்கள் , இளைஞர்கள், மாணவ மாணவிகள், திருவாங்காரனை ஊராட்சி மன்ற மகளிர் குழுவினர், எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்கின்றனர்.

48e60651-3ed8-41c3-b681-600a6750793a

திரு.ஜானகிராமன் அவர்கள் பலவேறு பணிகளுக்கு மத்தியிலும் சென்னையில் வசித்து வந்தாலும் தன்னுடைய பிறந்த ஊரைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை கிராமமாக முன்னெடுக்கவும் வேண்டி நீர் நிலைகளை தூர்வாரி, 10000 பனைவிதைகள் மற்றும் மரம் நடும் பணிகளை மேற்குறிப்பிட்டவர்களின் துணையோடு இந்த பெரிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

celebrating_rivers.

 

இவ்வாறு ஒரு சமூக பணியை திரு.ஜானகிராமன் அவர்கள் முன்னெடுத்து இருப்பது பாராட்டுதலுக்குரியது. இவருடைய இந்த பணிக்கு பொதுமக்களும், அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மேலும் இவருக்கு தற்போது உறுதுணையாகவுள்ள எக்ஸோரா அமைப்பு மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள், மகளிர் குழுக்கள், கிராம நிர்வாகிகள் என அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.

03819619-5feb-4a6e-9aa4-7da008ee90ce

திரு.ஜானகிராமன் அவர்களை போல ஒவ்வொரு தனிமனிதனும் முயற்சி மேற்கொண்டால் தமிழகமே பசுமை நிறைந்த மாநிலமாக உருவாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

15a6a5fb-1de6-4516-8270-2518f4a441c3

மேலும் அவருக்கு உறுதுணையாக நிற்க விரும்புவர்களும், உதவிகள் தேவைப்படுவோரும் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் அவரைத் தொடர்புகொள்ளலாம். திரு.ஜானகிராமன் 9841070414

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: